Home
Gadgets

மிரளுது தீபாவளி ஆஃபர்.. வெறும் ரூ.21-க்கு TWS இயர்பட்ஸ்.. அக்டோபர் 21-க்கு குறிச்சாச்சு.. எந்த மாடல்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெறும் ரூ.21 விலைக்கு ப்ரோபட்ஸ் ஏரியா 911 (Probuds Aria 911) கிடைக்க இருக்கிறது. அக்டோபர் 21ஆம் தேதியில் இந்த சிறப்பு விற்பனை தொடங்க இருக்கிறது. என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், 35 மணி நேரங்களுக்கும் மேல் பேக்கப், கேமிங் லோவ் லேட்டன்சி போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ப்ரோபட்ஸ் ஏரியா 911 மாடலை எப்படி வாங்குவது? எங்கு வாங்குவது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ப்ரோபட்ஸ் ஏரியா 911 மாடலானது லாவா நிறுவனத்தின் சப்-பிராண்ட் தயாரிப்பாகும். ரூ.999 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அக்டோபர் 21ஆம் தேதியில் வெறும் ரூ.21 விலைக்கு கிடைக்க இருக்கிறது. முதலில் ஆர்டர் செய்யும் 100 கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும். இதை தவறவிட்டால், 25 சதவீத டிஸ்கவுண்ட்டில் வாங்கலாம்.

மிரளுது தீபாவளி ஆஃபர்.. வெறும் ரூ.21-க்கு TWS இயர்பட்ஸ்.. அக்டோபர் 21!

அதாவது, இந்த விற்பனையானது அக்டோபர் 21ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு தொடங்கும். இந்த நேரத்தில் இருந்து முதலில் ஆர்டர் செய்யும் 100 கஸ்டமர்களுக்கு ரூ.21 விலைக்கு ப்ரோபட்ஸ் ஏரியா 911 கொடுக்கப்படும். இந்த ஆஃபர் போக வழக்கமாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு 25 சதவீத டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கும்.

லாவா இ-ஸ்டோர் (Lava e-store) மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்க இருக்கிறது. இதுபோக ப்ரோபட்ஸ் ஏரியா 911 மாடலுக்கு கூடுதலாக 30 நாட்கள் ப்ரீ-ட்ரயல் போன்ற சலுகை கொடுக்கப்படுகிறது. இதை வாங்கி 30 நாட்களுக்கு பயன்படுத்திவிட்டு, அதன்பிறகு பிடிக்கவில்லை என்றால், ரிட்டர்ன் செய்து கொள்ளலாம்.

இதற்கு 100 சதவீத ரீபண்ட் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை லாவா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு ஆர்டர் செய்து கொள்ளுங்கள். இப்போது, ப்ரோபட்ஸ் ஏரியா 911 மாடலின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ப்ரோபட்ஸ் ஏரியா 911 அம்சங்கள் (Probuds Aria 911 Specifications): இந்த மாடலில் 10 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் (Dynamic Drivers) கிடைக்கின்றன. இதில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) கிடைக்கிறது. கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 35ms லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) கிடைக்கிறது.

ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 35+ மணி நேரங்களுக்கு பிளேடைம் கொடுக்கிறது. ஃபுல் சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் தேவைப்படும் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் (Type C Fast Charging) கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 150 நிமிடங்களுக்கு பிளேடைம் பெற்று கொள்ளலாம். இதற்காக சார்ஜிங் கேஸில் 400mAh பேட்டரி கிடைக்கிறது.

அதேபோல பட்களில் 40mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையிலும் IPX4 ரேட்டிங் கொண்ட ஸ்வெட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Sweat & Splash Resistance) கிடைக்கிறது. இந்த ப்ரோபட்ஸ் ஏரியா 911 மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth V5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, 10 மீட்டர்கள் வரையில் ப்ளூடூத் ரேன்ஞ் கொடுக்கும்.

கூகுள் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் கொடுக்கிறது. இதுவொரு இன்-இயர் டிடபுள்யூஎஸ் (In-Ear TWS) மாடலாக இருக்கிறது. பிளாக் (Black), ரெட் (Red) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த மாடலின் மார்கெட் விலை ரூ.999ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Probuds Aria 911 With 35 Hrs Playtime For Just Rs 21 on October 21 in Diwali Zero-Risk Muhurat Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X