Home
Gadgets

சிங்கிள் சார்ஜில் 40 மணி நேர பிளேபேக்.. 8 மைக்குகள்.. ஹைபிரிட் ஏஎன்சி.. ஏஐ டிரான்ஸ்லேஷன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் போவா ஏஐ பட்ஸ் ப்ரோ (POVA AI Buds Pro) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏஐ மீட்டிங் சம்மரி, 78 மொழிகளில் ஏஐ டிரான்ஸ்லேஷன் மற்றும் குயிக் நோட்ஸ் போன்ற பீச்சர்களுடன் கிடைக்கிறது. 8 மைக்குகளை கொண்டிருப்பதால், கவனம் பெற்றுள்ளது. இந்த போவா ஏஐ பட்ஸ் ப்ரோ மாடலின் விவரங்களை பார்க்கலாம்.

டெக்னோ நிறுவனத்தின கீழ் போவா ஸ்மார்ட்போன்கள் களமிறங்கி வருகின்றன. இப்போது இயர்பட்ஸ் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பிரீமியம் இயர்பட்ஸ் மாடலாக இந்த போவா ஏஐ பட்ஸ் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டிகிரேடெட் கால் ரெக்கார்டிங், டிரான்ஸ்லேஷன் போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ளது.

சிங்கிள் சார்ஜில் 40 மணி நேர பிளேபேக்.. 8 மைக்குகள்.. ஹைபிரிட் ஏஎன்சி!

டிசைனை பார்த்தாலே பிரீமியம் மாடலாக இருப்பதை பீல் செய்ய முடிகிறது. ஏனென்றால், IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் மேட் ஃபிஷினிங் பாடி குளோசி மெட்டாலிக் ஃபிரேம் டிசைனில் பட்டையை கிளப்புகிறது. 8 மைக்குகளை பேக் செய்துள்ளது.

போவா ஏஐ பட்ஸ் ப்ரோ அம்சங்கள் (POVA AI Buds Pro Specifications): ஹை-ரெஸ் (Hi-Res) மற்றும் எல்எச்டிசி (LHDC) சப்போர்ட் கொண்ட டிரைவர்கள் கிடைக்கின்றன. பின்ச் கன்ட்ரோல் (Pinch Control) கொண்ட மாடலாக இந்த போவா ஏஐ பட்ஸ் ப்ரோ இருக்கிறது. குயிக் நோட் (Quick Note) பீச்சர் கிடைக்கிறது. இதற்காக சார்ஜிங் கேஸில் பிரத்யேக பட்டன் உள்ளது.

இதை கிளிக் செய்தால், ரெக்கார்டிங் தொடங்கும். 4 மணி நேரங்களுக்கு ஆடியோவை ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இப்படி எடுக்கப்படும் ரெக்கார்டிங்களை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழியில் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். 78 மொழிகளில் டிரான்ஸ்லேஷன் செய்ய முடியும். இதற்கான ஸ்டோரேஜ் இந்த போவா ஏஐ பட்ஸ் ப்ரோவின் கேஸில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

48dB ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Active Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. வயர்லெஸ் (Wireless) மற்றும் யூஎஸ்பி-சி (USB-C) போர்ட்டுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக 8 மைக்குகளை இந்த போவா ஏஐ பட்ஸ் ப்ரோ கொடுத்து இருக்கிறது.

ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Paring) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் பேரிங் செய்து கொள்ளலாம். இந்த பீச்சர்களுடன் ரூ.14,999 விலைக்கு இந்திய மார்கெட்டில் இந்த போவா ஏஐ பட்ஸ் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.12,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது. பேங்க் ஆஃபர்கள் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கும். வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
POVA AI Buds Pro With 40 Hours Playback Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X