பக்கத்து தெரு கூட அதிருமே.. 150W சவுண்ட்.. அறிமுகமானது புதிய Portronics ஹோம் தியேட்டர் சிஸ்டம்.. என்ன விலை?
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தரமான ப்ரொஜெக்டர் மற்றும் ஸ்பீக்கர்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் (ortronics Pure Sound Pro X2 Home Theatre System) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இந்த போர்ட்ரானிக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆனது தரமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 அம்சங்கள் (Portronics Pure Sound Pro X2 Specifications): வீட்டிலேயே திரையரங்கம் போன்ற ஒலி அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது தான் இந்த புதிய சாதனம். அதுவும் இது 150W 5.1-சேனல் ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகும். குறிப்பாக இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
அதேபோல் இந்த புதிய ஹோம் சிஸ்டம், திரைப்படங்கள், மியூசிக், கேமிங் மற்றும் நேரடி விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகவும் ஏற்றது என்று போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின் ஹோம் தியேட்டர் சிஸ்டம் விட இந்த போர்ட்ரானிக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம் மாடல் மிகவும் தனித்துவமானது.
ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 என்பது ஒரு சவுண்ட்பார், இரண்டு சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு வயர்டு சப்வூஃபர் ஆகியவற்றைக் கொண்ட 5.1-சேனல் ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகும். முன்பு கூறியது போல் இது இது மொத்தம் 150W வெளியீட்டை வழங்குகிறது. எனவே இது ஒரு தனித்துவமான ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆனது புளூடூத் 5.4, எச்டிஎம்ஐ போர்ட், ஆப்டிகல், யுஎஸ்பி போர்ட், AUX போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் டிவிகள், கேமிங் கன்சோல்கள், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் இந்த ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 மாடலை இணைத்துப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் மாடலில் மியூசிக் (Music), மூவி (Movie), நியூஸ் (News) மற்றும் நைட் (Night) என நான்கு EQ மோடுகளும் உள்ளன. எனவே பயனர்களுக்குத் தகுந்த ஆடியோ அம்சங்களைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.
முன்பு கூறியபடி போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது இதில் பிளேபேக் மற்றும் வால்யூம் செயல்பாடுகளை எளிதாக அணுகுவதற்கு, சவுண்ட்பாருக்குள்ளேயே கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறிய சாட்டிலைட் ஸ்பீக்கர்களை டிவி அமைப்பைச் சுற்றி வைக்கலாம். மேலும் மேம்படுத்தப்பட்ட குறைந்த அதிர்வெண் வெளியீட்டை வழங்கும் ஒரு பிரத்யேக சப்வூஃபரும் உள்ளது.

வயர்லெஸ் ரிமோட்டும் போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் உடன் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த புதிய ஹோம் தியேட்டர் சிஸ்டம் மாடலில் உள்ளன.
போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் மாடலி விலை ரூ.9,999-ஆக உள்ளது. ஆனால் தற்போது அறிமுக சலுகையாக ரூ.5,999 விலையில் Portronics.com-இல் வாங்க கிடைக்கிறது. அதேபோல் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications