வாங்காம விடமாடீங்க! ரூ.5999 இருந்தா போதும்! 100W சவுண்ட்பார் ரெடி! சப்வூப்பரும் வருது! போர்ட்ரானிக்ஸ் வேற!
வெறும் ரூ.5999 பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் 100 வாட்ஸ் வயர்லெஸ் சவுண்ட்பாருடன் (Soundbar) பிச்சியெடுக்கும் சப்வூப்பரையும் வாங்க முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் போர்ட்ரானிக்ஸ் (Portronics) கம்பெனி கொடுத்தால், வாங்காமல் இருக்க முடியுமா? இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.
நம்மில் பெரும்பாலானோருக்கு வீட்டில் ஹோம் தியேட்டர் வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால், நமது ஊரிலேயே ஸ்பீக்கர்கள், சப்-வூப்பர்களை வாங்கி கடையில் கொடுத்து ரெடி பண்ணி பயன்படுத்தியிருப்போம். ஆனால், அவை கம்பெனி சவுண்ட்பார்கள் அளவுக்கு குவாலிட்டியாக சவுண்ட் எஃபெக்ட்டை கொடுத்திருக்காது.

சரி, கம்பெனி சவுண்ட்பார், சப்-வூப்பர் வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்தால் கூட, அதன் விலை குறைந்தது ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கும். இதனால், நீண்ட காலம் காசு சேர்த்து வைத்து வாங்கி வேண்டிய நிலை கூட பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இவர்களுக்காகவே கம்மியான விலையில் பட்டையை கிளப்பும் வகையில் சப்வூப்பருடன் கூடிய சவுண்ட்பாரை போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் களமிறக்கியிருக்கிறது.
இந்த சவுண்ட்பாருக்கு போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ் 1 (Portronics Pure Sound Pro X1) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சவுண்ட்பார், ரிமோட் கன்ட்ரோல் (Remote Control), 5.25 இன்ச் சப்-வூப்பர், ப்ளூடூத் கன்ட்ரோல் (Bluetooth Control), 100W டிரைவர்கள் என்று ஹோம் தியேட்டர் பிரியர்களை அசத்தும்படி இருக்கிறது. இதன் முழு அம்சங்கள் பின்வருமாறு.
போர்ட்ரானிக்ஸ் ப்யூர் சவுண்ட் ப்ரோ எக்ஸ்1 அம்சங்கள்: இந்த சவுண்ட்பார் 5.25 இன்ச் பவர்ஃபுல் சப்-வூப்பர் (Subwoofer)கொண்டுள்ளது. இரண்டு 100W டிரைவர்கள் (100W Drivers) வருகிறது. 3டி ஸ்டீரியோ பேஸ் (3D Stereo Bass) சிஸ்டம் வருகிறது. மீயூசிக் (Music), மூவி (Movie) மற்றும் டிவி (TV) ஆகிய மூன்று சவுண்ட் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஈக்குலைசர் செட்டிங்ஸ் (Equalizer Settings) உள்ளது.
ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop), டிவி (TV), டேப்லெட் (Tablet) ஆகியவற்றில் எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். அதோடு யுஎஸ்பி (USB) போர்ட் மற்றும் ஆடியோ ஜேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஆர் ரிமோட் (IR Remote) வருகிறது. பிளாக் (Black) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.
கம்பெனி சவுண்ட்பார் என்பதால் ஒரு வருட வாரண்ட்டி கொடுக்கப்படுகிறது. இந்த சவுண்ட்பாரின் விலை ரூ. 12,499 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது, ஆரம்ப விலையாக ரூ.5,999க்கு கிடைக்கிறது. இந்த விலை லிமிடெட் ஆஃபர் மட்டுமே. விரையில் விலை மாறிவிடும் என்பதால், வாங்க நினைப்பவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போர்ட்ரானிக்ஸ் (Portronics) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








