Home
Gadgets

யாரும் எதிர்பார்க்கலை.. இது கேமரா இல்லை பாஸ்.. பவர் பேங்க்.. Portronics செதுக்கிய புது Power Bank விலை என்ன?

போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் அதன் பவர் பேங்க் சாதனங்களின் வரிசையில் புதிதாக ஒரு பவர் பேங்க் டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க் சாதனம் மிகவும் விதிசயமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, ஒரு கையடக்க கேமரா போல் இந்த சாதனம் காட்சியளித்தாலும், இது கேமராவாக இல்லாமல் மேக்னெட்டிக் பவர் பேங்க் சாதனமாக செயல்படுகிறது. இந்த பவர் பேங்க் டிவைஸின் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்த புதிய பவர் பேங்க் சாதனத்தை பவர் ஷட்டர் 10000mAh கேமரா ஷேப் பவர் பேங்க் (Power Shutter 10000mAh camera-shaped power bank) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க் சாதனத்தை நிறுவனம் ஒரு பாயிண்ட் சூட் கேமரா (point-and-shoot camera) போன்ற வடிவத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளது.

யாரும் எதிர்பார்க்கலை.. இது கேமரா இல்லை பாஸ்.. பவர் பேங்க்..

இந்த புதிய பவர் ஷட்டர் 10000mAh பவர் பேங்க் (Power Shutter 10000mAh Power Bank) சாதனம் வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டு மோட்களிலும் சிறப்பாக வேலை செய்கிறது. இதுவொரு போர்ட்டபிள் பவர் பேங்க் (Portable power bank) சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பயனர்கள் டிவைஸை எளிமையாக கையாள இதில் சிறிய லான்யார்ட் கேபிள் (Lanyard cable) வழங்கப்பட்டுள்ளது.

இந்த போர்ட்ரோனிக்ஸ் பவர் பேங்க் (Portronics power bank) சாதனம் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இணக்கமானதாக இருக்கிறது. இதில் இரண்டு வகையான ஸ்மார்ட்போன்களையும் (Smartphones) நீங்கள் இணைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம். இதில் பவர் பேங்க் சார்ஜிங் அளவை காண்பிக்கும் பிரத்தியேகமான LED டிஸ்பிளேவையும் (LED display power bank) நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பவர் பேங்க் சாதனம் தனித்துவமான பைடைரெக்ஷனால் டைப்-சி கேபிள் உடன் வருகிறது. இதை வைத்து ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். மறுபுறம் பவர் ஷட்டர் பவர் பேங்க் சாதனத்தையும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள மேக்னெட்டிக் ரிங் (magnetic ring) Qi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

இந்த பவர் பேங்க் சாதனம் 15W திறனில் வயர்லெஸ் சார்ஜிங் (15W wireless charging) அனுபவத்தை வழங்குகிறது. இது ஐபோன் மேக்னெட்டிக் மேக்சேப் சப்போர்ட் (MagSafe support) ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பவர் பேங்க் சாதனத்தில் நிறுவனம் ஆட்டோ ஹைபெர்னேஷன் (auto-hibernation feature) அம்சத்தையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் சார்ஜ் முடிந்த பிறகு, பவர் பேங்க் தானாக ஸ்லீப் மோடிற்கு சென்றுவிடும்.

இந்த பவர் ஷட்டர் பவர் பேங்க் சாதனம் 22.5W PD அவுட்புட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இந்த பவர் பேங்க் 1000 சார்ஜிங் சைக்கிளை ஆதரிக்கும், நீண்ட நாள் நீடிக்கும் ஆயுளை கொண்டுள்ளது. இது பிளாக் மற்றும் வெள்ளை நிறத்தில் வாங்க கிடைக்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், போர்ட்ரோனிக்ஸ் பவர் ஷட்டர் பவர் பேங்க் சாதனம் (Portronics power bank) ரூ. 1,699 என்ற விலையுடன் அம்ஷன் மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Power Shutter 10000mAh: Innovative Camera-Shaped Power Bank
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X