Home
Gadgets

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 250 கிராமில் 100 இன்ச் புரொஜெக்டர்.. 4800mAh பேட்டரி.. 3W ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே மிரளும்படி வெறும் 250 கிராம் எடையில் 100 இன்ச் புரொஜெக்சன் செய்யும்படி போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 (Portronics Pico 14) புரொஜெக்டர் களமிறங்கி இருக்கிறது. 4K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 4800mAh பேட்டரி, 1600 லூமென்ஸ், 3W ஆடியோ அவுட் கொண்ட ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 புரொஜெக்டரின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

போர்டபிள் டிசைனில் பார்கெட்டில் வைத்து எடுத்து செல்லும்படியான பாடி கொடுக்கிறது. 250 கிராம் எடை மற்றும் 60 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. டிரைபாட் (Tripod) மற்றும் ரிமோட் (Remote) கிடைக்கிறது. 4800mAh பேட்டரியை இதில் பேக் செய்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகரான பாடியில் 100 இன்ச் புரொஜெக்சனை கொடுத்து மார்கெட்டை மிரளவிட்டுள்ளது.

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 250 கிராமில் 100 இன்ச் புரொஜெக்டர்!

போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 அம்சங்கள் (Portronics Pico 14 Specifications): இந்த பிகோ மாடலானது டிஎல்பி (DLP) மற்றும் ஆர்ஜிபி எல்இடி (RGB LED) லைட் சோர்ஸ் கொண்ட புரொஜெக்டராகும். 720p தரத்தில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த நேட்டிவ் ரெசொலூஷன் (Native Resolution) மட்டுமல்லாமல், 4K இன்புட் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.

மேலும், 1600 லூமென்ஸ் (Lumens) சப்போர்ட் கிடைக்கிறது. பாக்கெட் சைஸ் காம்பாக்ட் மாடலாக இருந்தாலும், 30,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப் கொடுக்கிறது. ஆகவே, மற்ற மாடல்களை போலவே டியூரபிலிட்டி கிடைக்கும். இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 மாடல் மூலமாக 100 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதில் ரீசார்ஜபிள் பேட்டரி கிடைக்கிறது.

ஆகவே, இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் எடுத்து சென்று பயன்படுத்த முடியும். 4800mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியை ஸ்மார்ட்போன் போலவே சார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 60 நிமிடங்களுக்கு பிளேபேக் கொடுக்கும். அதுவும் வயர்லெஸ் மூலம் இந்த பிளேபேக் கிடைக்கிறது.

இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 புரொஜெக்டரில் 3W ஆடியோ அவுட் கொண்ட இன்-பில்ட் ஸ்பீக்கர் (in-built Speaker) கிடைக்கிறது. எகோ மோடில் (Eco Mode) மூலம் 25dB நாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கிடைப்பதால், இதை எளிதாக பயன்படுத்த முடியும். அதேபோல ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) போன்ற ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக கிடைக்கின்றன. இதுபோக யூடியூப் (YouTube) கிடைக்கிறது. ஒட்டுமொத்த கனெக்டிவிட்டி பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. ஆகவே, டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி உள்ளது.

மேலும், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) கிடைக்கிறது. போர்ட்களை பார்க்கையில், எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), யுஎஸ்பி ஏ (USB-A) போர்ட் மற்றும் யுஎஸ்பி-சி (USB-C) போர்ட் கிடைக்கிறது. மேலும், ஏயூஎக்ஸ் (AUX) கிடைக்கிறது. ஆகவே, மொபைல் கனெக்டிவிட்டி எளிதாக இருக்கும். இதற்கு 12 மாதங்கள் வாரண்டி கிடைக்கிறது.

இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 14 ப்ரொஜெக்டரின் விலை ரூ.28,349ஆக இருக்கிறது. ஸ்மார்ட்போன் சைஸில் காம்பாக்ட் மாடலாக இருப்பதால், விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. போர்ட்ரானிக்ஸ் தளத்தில் ஆர்டர் செய்யலாம். அதேபோல அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Portronics Pico 14 Projector With 100 inch Projection Launched India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X