லட்டு மாதிரி விற்பனை.. பட்ஜெட்ல 120 இன்ச் வீடியோ.. 10W ஆடியோ.. ரீசார்ஜ் பேட்டரி.. 12 மாத வாரண்டி.. எந்த மாடல்?
லட்டு மாதிரி பட்ஜெட்டில் 4K ரெசொலூஷனில் 120 இன்ச் வீடியோ ஸ்ட்ரீமிங், 10W ஆடியோ அவுட்புட், 3 மணி நேரங்கள் பேக்கப் கொடுக்கும் பேட்டரி, ஆட்டோ கீஸ்டோன், நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், டிஎல்பி டெக்னாலஜி போன்ற பீச்சர்களை கொண்ட போர்ட்ரானிக்ஸ் பிகோ 13 ஸ்மார்ட் புரொஜெக்டர் (Portronics Pico 13 Smart Projector) களமிறங்கி இருக்கிறது. கூடவே, அறிமுக சலுகையாக ரூ.5000 மதிப்பில் டிஸ்கவுண்ட் கிடைப்பதால், விற்பனை சக்கைப்போடு போடுகிறது.
போர்ட்ரானிக்ஸ் பிகோ 13 அம்சங்கள் (Portronics Pico 13 Specifications): ஹேண்டி மற்றும் காம்பாக்ட் டிசைனில் வருகிறது. பில்ட்-இன் கேஸ் (Built-in Case) மற்றும் டிரைபாட் (Tripod) கிடைக்கிறது. 20 இன்ச் முதல் 120 இன்ச் வரையில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் (Ultra HD) சப்போர்ட் கிடைக்கிறது. டிஎல்பி டெக்னாலஜி (DLP Technology) கொண்டிருக்கிறது.

இதுபோக 3500 லூமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஸ்ட்ரீமிங் குவாலிட்டி பக்காவாக இருக்கும். மேலும், ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) மற்றும் போகஸ் வீல் (Focus Wheel) எளிதாக அவுட் எடுத்து கொள்ளலாம். 0.5 மீட்டர் கேப்பில் 20 இன்ச் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். அதேபோல 3 மீட்டர் கேப்பில் 120 இன்ச் புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும்.
ஆகவே, சிறிய ரூம்களிலும் 120 இன்ச் புரொஜெக்சன் (120 inch Projection) செய்யலாம். இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 13 மாடலானது, அவுட்டோரில் எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் பேட்டரி கொண்டிருக்கிறது. ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், 3 மணி நேரங்களுக்கு வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். 1.39 கிலோ எடை மட்டுமே வருவதால், எளிதாக எங்கும் எடுத்து சென்று பயன்படுத்த முடியும்.
ஆடியோவை பார்க்கையில் 10W ஸ்பீக்கர்கள் இன்-பில்ட்டாக வருகின்றன. இதுபோக ஏயுஎக்ஸ் போர்ட் (AUX Port) மற்றும் ப்ளூடூத் ஆடியோ கனெக்டிவிட்டி (Bluetooth Audio Connectivity) வருகிறது. கஸ்டமைசபிள் ஆடியோ (Customizable Audio) சப்போர்ட் உள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 13 மாடலை ஸ்மார்ட்போன் (Smartphone) அல்லது டேப்லெட் (Tablet) மூலம் கனெக்ட் செய்து டிஸ்பிளே புரொஜெக்சன் செய்யலாம்.
ப்ளூடூத் மட்டுமல்லாமல், வை-பை (Wi-Fi), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி (USB) கனெக்டிவிட்டி வருகிறது. வை-பை கிடைப்பதால், ஓடிடி ஆப்களில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), யூடியூப் (YouTube) போன்ற ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக கிடைக்கின்றன.
இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 13 மாடலில் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் (Type-C Fast Charging) வருகிறது. ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ் (Android 9 OS) கிடைக்கிறது. ஆகவே ஆப்களின் சப்போர்ட் பக்காவாக எதிர்பார்க்கலாம். காம்பாக்ட் பாடி வருவதால், சிறியதாகவே இருக்கும். பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.31,499ஆக இருக்கிறது.
இருப்பினும், அறிமுக சலுகையில் வெறும் ரூ.26,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. போர்ட்ரானிக்ஸ் வெப்சைட் (Portronics Website), அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய ஆர்டருக்கு தளங்களில் கிடைக்கிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பிகோ 13 மாடலுக்கு 12 மாதங்கள் வாரண்டி கிடைக்கிறது. பட்ஜெட்டில் 4K புரொஜெக்டருக்கு இந்த மாடல் நல்ல ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








