வீட்டுக்கு 2 வாங்குவாங்களே.. பக்கா பட்ஜெட்டில் 150W ப்ளூடூத் ஸ்பீக்கர், TWS மோட், 6 மணிநேர பேட்டரி!
போர்ட்ரானிக்ஸ் நிறுவனமானது நெபுலா எக்ஸ் என்ற புதிய வயர்லெஸ் பார்ட்டி ஸ்பீக்கரை (Portronics Nebula X Wireless Party Speaker) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த 150W ஆடியோ அவுட்புட், வயர்லெஸ் கரோக்கி ஆதரவு மற்றும் டைனமிக் ஆர்ஜிபி லைட்டிங் உடன் வரும் இந்த ஸ்பீக்கரின் விலை நிர்ணயம் என்ன? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:
என்னென்ன அம்சங்கள்? ஹோம் என்டர்டெய்ன்மென்ட்டை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு உள்ள போர்ட்ரானிக்ஸ் நெபுலா எக்ஸ் வயர்லெஸ் பார்ட்டி ஸ்பீக்கர் ஆனது வீட்டில் நடக்கும் விருந்துகள், சாதாரண கூட்டங்கள் மற்றும் பயணத்தின் போதான பொழுதுபோக்குகளை இலக்காக கொண்ட பல அம்சங்களை தன்வசம் கொண்டு உள்ளது.

போர்ட்ரானிக்ஸ் நெபுலா எக்ஸ் வயர்லெஸ் பார்ட்டி ஸ்பீக்கரின் மிக முக்கிய அம்சம் அதன் 150W சவுண்ட் சிஸ்டம் தான். இது ஆழமான, அதிவேக பாஸ் மற்றும் தெளிவான வாய்ஸ் பேக்கிரவுண்ட்டை வழங்குகிறது. மேலும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனமானது லோ-எண்ட் ரெஸ்பான்ஸை தீவிரப்படுத்த மேம்படுத்தப்பட்ட பாஸ் பூஸ்ட் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது, இது ஒவ்வொரு பீட்டிற்கும் அதிக தாக்கத்தை அளிக்கிறது.
பெரிய இடங்கள் அல்லது ஸ்டீரியோ செட்டப்களுக்கு, பயனர்கள் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) மோட்-ஐ பயன்படுத்தி இரண்டு நெபுலா எக்ஸ் ஸ்பீக்கர்களை வயர்லெஸ் முறையில் இணைக்க முடியும். மேலும் இந்த ஸ்பீக்கரில் ஒரு தொட்டுணரக்கூடிய வயர்லெஸ் மைக்ரோஃபோனும் உள்ளது. இது கரோக்கி செஷன்களை நேரடியாக பாக்ஸில் இருந்து செயல்படுத்துகிறது. இது எந்த அடிஷனல் செட்டப்பும் இல்லாமல் கனெக்ட் ஆகும்.
நெபுலா எக்ஸ் பார்ட்டி ஸ்பீக்கர் ஆனது ஒரு மேட்-பிளாக் பினிஷ் மற்றும் பீட்டுடன் சின்க் ஆகும் வண்ணத்தை மாற்றும் ஆர்பிஜி எல்இடி (RGB LED) ஸ்ட்ரிப்பை கொண்டுள்ளது. மேலும் ஒப்பீட்டளவில் பெரிய பூட்பிரிண்ட்-ஐ கொண்டிருந்தாலும் இந்த ஸ்பீக்கர் ஒரு பில்ட்-இன் ஹேண்டிலை கொண்டுள்ளது; ஆக இதை எளிதாக அங்குமிங்கும் எடுத்து செல்ல முடியும்
மேலும் இந்த ஸ்பீக்கரின் பக்கவாட்டில் தொடு உணர் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது ரிமோட்டை நம்பாமல் பிளேபேக் மற்றும் செட்டிங்ஸ்களை உடனே சரிசெய்ய முடியும். கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத் 5.3, யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் (AUX) போன்ற பல இன்புட் ஆப்ஷன்களை வழங்குகிறது.
மேலும் போர்ட்ரானிக்ஸ் நெபுலா எக்ஸ் வயர்லெஸ் பார்ட்டி ஸ்பீக்கரை விரைவாகவும் எளிதாகவும் ரீசார்ஜ் செய்வதற்காக டைப்-சி போர்ட்டையும் கொண்டுள்ளது. இந்த பார்ட்டி ஸ்பீக்கரில் உள்ள பில்ட்-இன் பேட்டரி ஆனது 6 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்குகிறது. பெரும்பாலான பார்ட்டிகள் அல்லது மாலை நேர கூட்டங்களுக்கு இது போதுமானதாக இருக்கும்.
என்ன விலை? போர்ட்ரானிக்ஸ் நெபுலா எக்ஸ் வயர்லெஸ் பார்ட்டி ஸ்பீக்கர் ஆனது தற்போது ரூ.9,499 என்கிற அறிமுக விலையில் வாங்க கிடைக்கிறது. இது 12 மாத உத்தரவாதத்துடன் வருகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த பார்ட்டி ஸ்பீக்கரை போர்ட்ரானிக்ஸ்.காம் (Portronics.com), அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் முக்கிய ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக வாங்கலாம்.
சமீபத்தில் 8 மணிநேர பேட்டரி லைஃப் உடன் பூம் பார்ட்டி 210 மற்றும் பூம் பார்ட்டி 110 என்கிற 2 புதிய பார்ட்டி ஸ்பீக்கர்களும் கூட இந்தியாவில் அறிமுகமாகின. பூம் பார்ட்டி 210 பார்ட்டி ஸ்பீக்கர் ஆனது ரூ.9,499 என்கிற அறிமுக விலையில் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள பூம் பார்ட்டி 110 ஸ்பீக்கர் ஆனது ரூ.9999 என்கிற அறிமுக விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த 2 மாடல்களுமே பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் வழியாக மற்றும் இன்பேஸ் டெக்னாலஜிஸ் பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு போர்ட்ரானிக்ஸ்-ன் 6 மணிநேர பேட்டரி போதவில்லை என்று தோன்றினால் நீங்கள் பூம் பிராண்டை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








