ஆர்டர் பறக்குது.. 1000 ரூபாய்க்கு 20,000mAh மெகா ஸைஸ் பவர் பேங்க்.. Portronics தூள் கிளப்புது..
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் ஒரு மெகா ஸைஸ் பவர் பேங்க் (Mega size power bank) சாதனத்தை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. யாரும் எதிர்பார்த்திடாத மிகவும் குறைந்த விலையில் 20,000mAh திறன் கொண்ட பவர்பேங்க் சாதனத்தை போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20K (Portronics Luxcell Bind 20K) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த பவர்பேங்க் சாதனம் ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களை சார்ஜ் செய்யும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இந்த போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20K விலை என்ன? என்பதை பார்க்கலாம்.
போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20K (Portronics Luxcell Bind 20K) என்ற மெகா சைஸ் பேட்டரி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இது மல்டிபிள் சாதனங்களை ஒரே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய அனுமதிக்கும் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20K பவர் பேங்க் (Portronics Luxcell Bind 20K Power Bank) பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20K பவர் பேங்க் (Portronics Luxcell Bind 20K Power Bank):
இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20K பவர் பேங்க் சாதனம் ஒரே நேரத்தில் 3 சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இந்த பவர் பேங்க் சாதனத்தின் உதவியுடன் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone), ஐபோன் (iPhone), TWS இயர்பட்ஸ் (Earbuds), டேப்லெட் (Tablet), ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) போன்ற சாதனங்களை தேவைப்படும் நேரங்களில் சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று போர்ட்ரோனிக்ஸ் கூறியுள்ளது.
இந்த போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20,000mAh பவர் பேங்க் (Portronics Luxcell Bind 20,000mAh Power Bank) சாதனத்தில் ஒரு USB Type-C சார்ஜிங் கேபிள் (charging cable) மற்றும் ஒரு iOS சார்ஜிங் கேபிள் ஆகியவை இன்பில்ட்டாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், உங்கள் மற்ற கேட்ஜெட்களை (Gadgets) சார்ஜ் செய்ய அனுமதிக்கும் USB Type A போர்ட் (port) ஆதரவையும் இந்த பவர் பேங்க் கொண்டுள்ளது.
இந்த போர்ட்ரோனிக்ஸ் பவர் பேங்க் (Portronics Power Bank) சாதனம் ஃபிலைட் அப்ரூவல் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த பவர் பேங்க் சாதனத்தை நீங்கள் ஏரோபிளேனில் (Aeroplane) கூட எடுத்து சென்று சார்ஜ் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பவர் பேங்க் சார்ஜ் அளவை சுட்டிக்காட்டும் எல்இடி இண்டிகேட்டர் லைட்டுடன் ( LED indicator light) வருகிறது.
போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20,000mAh பவர் பேங்க் விலை (Portronics Luxcell Bind 20,000mAh Power Bank Price):
இது BIS சான்று பெற்றது. இது உங்கள் பவர் பேங்க் எந்தவிதமான எதிர்பாராத விபத்தை தாங்கும் திறன் கொண்டது. உதாரணமாக சிப் ப்ரொடெக்ஷன், ஷார்ட் சர்க்யூட், ஓவர் வோல்ட்டேஜ், ஓவர் கரண்ட், ஓவர் ஹீட்டிங் மற்றும் பல சிக்கல்களில் இருந்து இந்த பவர் பேங்க் சாதனம் முற்றிலும் பாதுகாப்பானதென்று போர்ட்ரோனிக்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. இது பாக்ஸ் உடன் USB Type C to Type C பாஸ்ட் சார்ஜிங் கேபிளையும் வழங்குகிறது.
போர்ட்ரோனிக்ஸ் லக்ஸ்செல் பைண்ட் 20K பவர் பேங்க் (Portronics Luxcell Bind 20K Power Bank) விலை பற்றி பார்க்கையில், இது ரூ. 1,499 என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சாதனத்தை நீங்கள் இப்போது பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் சில சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக வாங்கலாம். இந்த 20000mAh பவர் பேங்க்கை பயன்படுத்தி உங்கள் போனை 8 முறை வரை சார்ஜ் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications