வெறும் ரூ. 800 விலை.. வயர்லெஸ் கீபோர்ட்.. அதுவும் பிரைட்டா கலர்கலரா? ஸ்மார்ட்போனுக்கும் யூஸ் பண்ணலாமா?
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் வெறும் ரூ. 849 விலையில் புதிய வயர்லெஸ் கீபோர்ட் (wireless keyboard) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த கீபோர்ட் (Keyboard) பற்றிய சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விபரத்தை இப்போது பார்க்கலாம்.
போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பப்பில் ஸ்கொயர் வயர்லெஸ் கீபோர்ட் (Bubble Square Wireless Keyboard) என்ற அட்டகாசமான வயர்லெஸ் கீபோர்ட் சாதனத்தை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கீபோர்ட் சாதனம் முழு சைஸ் லேஅவுட் (Full size layout) உடன் நுமரிக் கீபேட் (numeric kepad) உடன் வருகிறது. இந்த கீபோர்ட் சாதனம் மிகவும் காம்பெக்ட் சைஸ் உடன் ஒரு போர்ட்டபிள் சாதனமாக வெளிவந்துள்ளது.

போர்ட்ரோனிக்ஸ் பப்பில் ஸ்கொயர் வயர்லெஸ் கீபோர்ட் (Portronics Bubble Square Wireless Keyboard):
இதன் அளவு தோராயமாக 39.5 x 15.8 x 3.2 cm அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தினசரி கீபோர்ட் பயன்படுத்துவோருக்கு ஒரு சிறந்த சாதனமாக அமைகிறது. இதை நீங்கள் எங்கு சென்றாலும் கையோடு எடுத்து செல்லும் அளவிற்கு இது கைக்கு அடக்கமான அளவில் வருகிறது. இந்த கீபோர்டில் உள்ள ஒவ்வொரு கீஸ்களும் சரியான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் பப்பில் ஸ்கொயர் வயர்லெஸ் கீபோர்ட் (Portronics Bubble Square Wireless Keyboard) சாதனம் டூயல் கனெக்டிவிட்டி அம்சத்துடன் வருகிறது. இதில் ப்ளூடூத் வி5.3 மற்றும் 2.4 GHz RF ரிஷிவர் அம்சத்துடன் வருகிறது. இந்த போர்ட்ரோனிக்ஸ் கீபோர்ட் சாதனம் ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்லெட் (Tablet), லேப்டாப் (Laptop) மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடன் (Desktop computer) சிறப்பாக இணைந்து செயல்படுகிறது.
இந்த கீபோர்ட் சாதனம் மல்டி டிவைஸ் பேரிங் (multi device paring) அம்சத்துடன் வருகிறது. போர்ட்ரோனிக்ஸ் பப்பில் ஸ்கொயர் வயர்லெஸ் கீபோர்ட் சாதனம் ஒரே நேரத்தில் 3 டிவைஸ் உடன் இணைகிறது. இதில் பிரத்தியேகமான குவிக்க ஸ்விட்ச் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. எளிமையாக மற்ற சாதனங்களுக்கு இடையில் பேரிங் அம்சத்தை மாற்றிக்கொள்ள இந்த பட்டன் அனுமதிக்கிறது.

பிரைட்டா.. கலர்கலரா.. ஸ்மார்ட்போனுக்கு கூட யூஸ் செய்ய கூடிய வயர்லெஸ் கீபோர்ட் அறிமுகம்:
இந்த டிவைஸ் விண்டோஸ் 11 (Windows 11), மாக் ஓஎஸ் 12 (macOS 12), மற்றும் ஐஓஎஸ் 12 (iOS 12) அதற்கு மேற்பட்ட சாதனங்களுடன் இணக்கமானது. இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் பப்பில் ஸ்கொயர் வயர்லெஸ் கீபோர்ட் (Portronics Bubble Square Wireless Keyboard) டிவைஸ் ABS மெட்ரியல் உடன் ஆன்டி-ஸ்லிப் சிலிகான் பேட்ஸ் உடன் வருகிறது. இது மிகவும் உறுதியானது என்பதை காண்பிக்கிறது.
இந்த கீபோர்ட் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டை பிளேஸ் செய்ய அனுமதிக்கும் ஹோல்டர் இடத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் சரியான பார்வை கோணத்தில் உங்கள் டிஸ்பிளே சாதனங்களை வைத்து, ப்ளூடூத் உடன் இந்த கீபோர்டை இணைத்து உங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியும். இத கீபோர்ட் சாதனம் வால்யூம் கண்ட்ரோல் (volume control), மீடியா பிளேபேக் (media playback) மற்றும் மற்ற ஃபங்க்ஷன் கீஸ்களை கொண்டுள்ளது.
இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் பப்பில் ஸ்கொயர் வயர்லெஸ் கீபோர்ட் (Portronics Bubble Square Wireless Keyboard) விலை பற்றி பேசுகையில், இது இந்திய சந்தையில் ரூ. 849 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிங்க், கிரீன், பர்பிள் நிறங்களில் அமேசான் (Amazon.in) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart.com) வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








