கிழியுது சவுண்ட்.. பிரீமியம் லுக்.. மார்ஷெல் ஸ்பீக்கர் மாதிரி இருக்கு.. ஆன விலை ரொம்ப கம்மி.. உடனே வாங்குங்க..
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் இந்தியாவில் புதிதாக போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Portronics Harmony Mini Bluetooth Speaker) என்ற ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth Speaker) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்பீக்கர் சாதனம் 25W எச்டி சவுண்ட் (25W HD sound) பவர் உடன் வருகிறது. பார்ப்பதற்கு இது மார்ஷெல் ப்ளூடூத் ஸ்பீக்கர் போல காட்சியளிக்கிறது. இதன் வடிவமைப்பு லெதர் பினிஷ் பாட்டியுடன் RGB லைட்டிங் உடன் வருகிறது. இந்த புதிய ஸ்பீக்கரின் விலை என்ன? இதன் அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
உலக பிரபலமான ப்ளூடூத் ஸ்பீக்கர் பிராண்ட் என்றால் நாம் மார்ஷெல் நிறுவனத்தை குறிப்பிட்டு கூறலாம். மார்ஷெல் ஸ்பீக்கர்களுக்கென்றே உலகளவில் சில ரசிகர்கள் இருக்கிறார்கள். உலக புகழ்ப்பெற்ற பிராண்ட் என்றால், இதன் விலை பற்றி சொல்லவா வேண்டும். மீடியம் சைஸ் ஸ்பீக்கர்களே இந்த பிராண்டில் ரூ. 28,999 விலையில் இருந்து துவங்குகிறது. இத்தகைய ஸ்பீக்கர் போன்ற சாதனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றாலும் இதன் விலை எல்லோருக்கும் பிடித்தமானதாக இல்லை.

போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Portronics Harmony Mini Bluetooth Speaker):
சந்தையில் மார்ஷெல் ஸ்பீக்கர்களுக்கு டிமாண்ட் இருந்தாலும், எல்லோராலும் அதை வாங்க முடிவதில்லை. இதை உணர்ந்த போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தற்போது, பார்ப்பதற்கு ஏறக்குறைய மார்ஷெல் ஸ்பீக்கர் போல காட்சியளிக்கும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனத்தை வெறும் ரூ. 2000 விலை புள்ளியில் அறிமுகம் செய்து, கேட்ஜெட் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Portronics Harmony Mini Bluetooth Speaker) பற்றிய விபரங்கள் இதோ.
போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Portronics Harmony Mini Bluetooth Speaker) சாதனம் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மற்றும் டீப் பாஸ் அனுபவத்தை வளங்குகிறது. இதில் இன்பில்ட்டாக சப்வூப்பர் அம்சமும் இடம்பெறுகிறது. இந்த புதிய ஸ்பீக்கர் சாதனத்தில் போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் பில்ட் இன் மைக்யை வழங்கியுள்ளது. இதை பயன்படுத்தி நீங்கள் வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்கலாம்.
புதிய போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Portronics Harmony Mini Bluetooth Speaker) சாதனம் ஸ்லீக் லெதர் பினிஷ் உடன் வண்ணமயமான RGB லைட்டிங் உடன் வருகிறது. இந்த புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் 6 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது USB Type-C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது.
போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை (Portronics Harmony Mini Bluetooth Speaker Price):
போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Portronics Harmony Mini Bluetooth Speaker) சாதனம் ப்ளூடூத் V5.3, AUX-In, EQ அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் மற்ற ஸ்பீக்கர் சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும் TWS மோட் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. இது இப்போது பிளாக் நிறத்தில் மட்டும் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.
போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனி மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Portronics Harmony Mini Bluetooth Speaker) சாதனம் போர்ட்ரோனிக்ஸ் இணையதளம், அமேசான் இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட் தளம் வழியாக ரூ. 2,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள இன்னும் சில ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகள் வழியாகவும் இந்த ஸ்பீக்கர் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








