Home
Gadgets

Portronics பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்.. விலை என்ன?

போர்ட்ரானிக்ஸ் இந்தியாவில் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 அனைத்து முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலிருந்து பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

புதிய போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்

புதிய போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்

புதிய போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட் பிளாக் மற்றும் ப்ளூ வண்ணங்களில் 12 மாத உத்தரவாதத்துடன் தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வயர்லெஸ் ஸ்போர்ட்ஸ் ஹெட்செட் பாஸ் மற்றும் வளர்ந்து வரும் எச்டி ஸ்டீரியோ சவுண்டு அம்சத்துடன் வருகிறது. இதன் இயர்பட்ஸ்கள் மென்மையான, சிலிகான் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி

8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி

இதனால், இது பயனரின் சருமத்தை எரிச்சலடையச் செய்யாது மற்றும் நீண்ட நேரம் அணியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. IPX4 சான்றுடன் இந்த ஹெட்செட் வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. ஹார்மோனிக்ஸ் 300 ஹெட்செட் 8 மணி நேரம் நீடிக்கும் நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. 10 நிமிடங்களுக்கு குயிக் சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை பயன்படுத்த முடியுமென்று நிறுவனம் கூறியுள்ளது.

வித்தியாசமான முழு ஆடியோ அனுபவம்

வித்தியாசமான முழு ஆடியோ அனுபவம்

புதிதாக கிடைக்கக்கூடிய போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட் வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் வருகிறது. ஹெட்செட் இசையை எளிதில் கேட்கவும், வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளவும் / பெறவும் அனுமதிக்கிறது. அதேபோல், உங்கள் ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து பார்த்துக்கொள்ள சிரமமின்றி ஒரு வித்தியாசமான முழு ஆடியோ ஓட்டத்தை அனுபவிக்கவும் உங்களை இந்த ஹெட்செட் அனுமதிக்கிறது.

விலை என்ன?

விலை என்ன?

ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இந்த புதிய போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 300 வயர்லெஸ் ஹெட்செட்டில் இருப்பதால், பயனர்கள் அதிகபட்ச உயர் தரம் கொண்ட ஆடியோ வசதியைக் கேட்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. புதிய ஹெட்செட் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் இந்திய விலை வெறும் ரூ. 2,999 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Harmonics 300 wireless sports headset launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X