ஒரே ஆளு தான்.. சுத்தி 3 டிவைஸ் சார்ஜிங்.. டிஜிட்டல் கிளாக்.. ரூ.2,499 போதும்.. ஸ்மார்ட்போன் டூ இயர்பட்ஸ்!
ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்பட்ஸ் என்று மூன்று டிவைஸ்களில் சார்ஜிங் செய்து கொள்ளும் விதமாக போர்ட்ரோனிக்ஸ் பெல்லா 2 (Portronics Bella 2) சர்ஜிங் ஸ்டேஷன் களமிறங்கி இருக்கிறது. மேலும், டிஜிட்டல் கிளாக், 5W வயர்டு போர்ட் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருப்பதால் சார்ஜிங் ஸ்டேஷன் பிரியர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது. இந்த போர்ட்ரோனிக்ஸ் பெல்லா 2 மாடலின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்.
இப்போதெல்லாமல், ஸ்மார்ட்போன் மட்டுமல்ல ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் என்று மற்ற டிவைஸ்களுக்கும் சார்ஜிங் போட வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ப்ளூடூத் காலிங் போன்ற பல்வேறு பீச்சர்கள் அந்த மாடல்களிலும் வந்துவிட்டன. ஆகவே, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சார்ஜ் போடுவதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது.

இதற்காகவே சர்ஜிங் ஸ்டேஷன் (Charging Station) பிரத்யேகமாக களமிறங்கி இருக்கின்றன. ஒரே நேரத்தில் 3 டிவைஸ்கள் வரை சார்ஜ் செய்து கொள்ளும் விதமாக சர்ஜிங் ஸ்டேஷன் கிடைப்பதால், வரவேற்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. இப்போது, டிஜிட்டல் கிளாக் (Digital Clock) உடன் வெளியாகி தனி கவனம் பெற்றுள்ளது.
இதில் பட்ஜெட்டில் மூன்று டிவைஸ் கனெக்டிவிட்டி மற்றும் டிஜிட்டல் கிளாக் உடன் போர்ட்ரோனிக்ஸ் பெல்லா 2 சார்ஜிங் ஸ்டேஷன் (Portronics Bella 2 Charging Station) வெளியாகி இருக்கிறது. 4 லெவல் டிஸ்பிளே பிரைட்னஸ், டிம் எல்இடி கிளாக் உள்ளிட்ட கஸ்டமைசபிள் ஆப்ஷன்களுடன் இந்த டிஜிட்டல் கிளாக் வருகிறது.
போர்ட்ரோனிக்ஸ் பெல்லா 2 அம்சங்கள் (Portronics Bella 2 Specifications): இதுவொரு 3-இன்-1 மேக்சேப் வயர்லெஸ் சார்ஜர் (MagSafe Wireless Charger) மாடலாகும். கியூ (Qi) சப்போர்ட் கொண்ட ஐபோன்கள் (iPhones), ஆப்பிள் ஸ்மார்ட்வாட்கள் (Apple Smartwatches) மற்றும் ஏர்பாட்ஸ் (AirPods) ஆகிய டிவைஸ்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த மாடலில் அலாரம் சப்போர்ட் உடன் டிஜிட்டல் கிளாக் வருகிறது. இதற்காக பில்ட்-இன் பேட்டரி (Built-in Battery) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கிளாக் 12/24 மணி நேர கிளாக் சப்போர்ட் வருகிறது. ஸ்னூஸ் பட்டன் (Snooze Button) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4 பிரைட்னஸ் வெவல் வருகிறது. ஆகவே, கஸ்டமைசபிள் செய்து கொள்ளலாம்.
அதேபோல அலாரம் கிளாக் செட் செய்து கொள்ளலாம். இந்த போர்ட்ரோனிக்ஸ் பெல்லா 2 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஐபோன் மாடல்களை 1 மணி நேரத்தில் 40 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல ஆப்பிள் வாட்ச்களை 50 நிமிடங்களில் 80 சதவீதமும், ஏர்பாட்களை 1 மணி நேரத்தில் 80 சதவீதமும் சார்ஜ் செய்ய முடியும்.
இதுபோக யுஎஸ்பி போர்ட் (USB Port) மூலம் 5W சார்ஜிங் அவுட்புட் சப்போர்ட் வருகிறது. டைப்-டி (Type-C) இன்புட் கொண்டிருக்கிறது. 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ், வாட்ச் உள்ளிட்ட மல்டிபிள் டிவைஸ்களில் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த மாடலுக்கு 12 மாதங்கள் வாரண்டி கிடைக்கிறது.
பிளாக் கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வளவு பீச்சர்களுடன் ரூ.2,499 ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. இந்த விலை அறிமுக சலுகையாகும். ஆகவே, வரும் நாட்களில் இந்த போர்ட்ரோனிக்ஸ் பெல்லா 2 சார்ஜிங் ஸ்டேஷனின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications