Home
Gadgets

அள்ளி வீசும் அமேசான்.. ஆண்ட்ராய்டு OS, ஆட்டோ கீஸ்டோன், 120 இன்ச்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026 (amazon great freedom sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் தரமான போர்ட்ரானிக்ஸ் பீம் 570 (Portronics Beem 570) ப்ரொஜெக்டர் மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடலை ரூ.16849 விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசும் அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 570 அம்சங்கள் (Portronics Beem 570 Specifications): 1080P ஃபுல் எச்டி சப்போர்ட் மற்றும் 4கே சப்போர்ட் வழங்குகிறது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல். மேலும் 10000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி இதில் உள்ளது. இதுதவிர 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெட்பிளிக்ஸ் சான்றளிக்கப்பட்டது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல். இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல்.

அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மூலம் 120 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 85-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.

ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ ஃபோகஸ் (Auto focus), அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance), ஆட்டோ அலைன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புத்தம் புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 13 (Android TV) ஓஎஸ் மூலம் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல் இயங்குகிறது. பின்பு நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (built-in OTT apps) இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

அள்ளி வீசும் அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

270 டிகிரி ரோட்டேஷன் (270 degree rotation) ஆதரவு கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். ஸ்கிரீன் மிரரிங்கை ஆதரிக்கிறது இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர்.

மேலும் வைஃபை 6, புளூடூத் 5.4, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AUX, இயர்போன் அவுட் உள்ளிட்ட இயர்போன் அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போர்ட்ரானிக்ஸ் பீம் 570 மாடலில் உள்ளன. அதேபோல் இந்த சாதனத்தில் பில்ட்-இன் 5W ஸ்பீக்கர்கள் உள்ளன. இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Portronics Beem 570 Smart Projector is available at 47 percent discount in Amazon Great Freedom sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X