வெளுத்து கட்டிய பிளிப்கார்ட்.. ரூ.16,649 பட்ஜெட்ல 120 இன்ச் ப்ரொஜெக்டர்.. 1080p ரெசொலூஷன் வீடியோ.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், ஹோம் தியேட்டர்கள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ப்ரொஜெக்டரும் தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 47 சதவீத தள்ளுபடி விலைக்கு போர்ட்ரானிக்ஸ் பீம் 570 (Portronics BEEM 570) மாடல் கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,399 விலைக்கு வாங்க முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,750 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.16,649 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ விரும்பிகளுக்கு 6 மாத நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 570 Smart Projector Specifications): வீட்டிலேயே தியேட்டர் அனுபவத்தைப் பெற விரும்புவோருக்கு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஏற்ற மாடலாகும். இதில் 60 இன்ச் முதல் 120 இன்ச் வரையிலான பெரிய ஸ்கிரீனில் மூவிக்களை பார்க்க முடியும். 4 அடி தூரத்தில் 60 இன்ச் அளவிலும், 10 அடி தூரத்தில் 120 இன்ச் அளவிலும் பார்க்கலாம்.
இந்த ப்ரொஜெக்டரில் 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 4K சப்போர்ட் (4K Support) வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும், 10,000 லுமென்ஸ் பிரைட்னஸ் மற்றும் 50,000 மணி நேர லேம்ப் லைப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பட்ஜெட்டில் அதிக லைஃப்புடன் பெரிய ஸ்கிரீனில் வீடியோக்கள் மற்றும் மூவிக்களை பார்த்து ரசிக்க முடியும்.
ப்ரொஜெக்டரை ஒவ்வொரு முறையும் கையால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியத்தைக் குறைக்கும் வகையில் பல ஆட்டோமேட்டிக் அம்சங்கள் இதில் உள்ளன. ஆட்டோஃபோகஸ் (Autofocus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் ஆட்டோ அலைன்மெண்ட் (Auto Alignment) ஆகியவை ஸ்க்ரீனை சரியான முறையில் அமைக்க உதவுகின்றன.
மேலும், ஆப்ஸ்டக்கிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரை, இந்த மாடலில் டூயல்-பேண்ட் வை-ஃபை (Dual-band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் ஆகியவையும் உள்ளன. இதன் மூலம் தேவைக்கேற்ப டிவைஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சாதாரண ப்ரொஜெக்டர்களை போல ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற டிவைஸ்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமின்றி, ஸ்மார்ட் டிவியில் இருப்பதைப் போன்ற அனுபவத்தையும் இந்த மாடல் வழங்குகிறது. இதில் வேல் டிவி ஓஎஸ் (Whale TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) இடம்பெற்றுள்ளன. மேலும், நெட்பிளிக்ஸ் (Netflix) சர்டிஃபைடு மாடலாக உள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்களுக்காக யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஆப்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மூவிக்கள், வெப் சீரிஸ் மற்றும் வீடியோக்களைப் பார்க்க தனியாக ஒவ்வொரு முறையும் லேப்டாப்பை இணைக்க வேண்டியதில்லை. தேவையான ஆப்களைப் பயன்படுத்தி நேரடியாக கன்டென்ட்களை பார்க்கலாம்.
ஆடியோ வசதிக்காக 5W இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பெரிய திரையில் பார்க்க ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) வசதியும் உதவுகிறது. இதனால் வீட்டில் திரைப்படங்கள் பார்ப்பது மட்டுமின்றி, வீடியோ மற்றும் பிற கன்டென்ட்களை பெரிய திரையில் பயன்படுத்துவதற்கும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ப்ரொஜெக்டரை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications
