டிவி சாம்ராஜ்யமே மிரளுது.. ரூ.14499 க்கு 100 இன்ச் LED ப்ரொஜெக்டர்.. ஆண்ட்ராய்டு OS.. HDMI இன்.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பீம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மலிவான விலைக்கு 100 இன்ச் முதல் 200 இன்ச் வரையில் ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது, போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 மாடலின் விவரங்களை பார்க்கலாம்.
நெட்பிளிக்ஸ் சர்ட்பைடு மாடலாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் அறிமுகமாகி உள்ளது. 1080p ஃபுல்எச்டி ரெசொலூஷன் கொடுத்துள்ளது. டில்ட்-ஆங்கிள் டிசைனில் டேபிள் டாப் மட்டுமல்லாமல், மல்டிபிள் ஆங்கிள்களில் பயன்படுத்தி கொள்ள கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) கிடைப்பதால், எளிதாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ப்ரொஜெக்டரை பயன்படுத்தலாம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 560 Smart Android Projector Specificaions): 100 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ப்ரொஜெக்சனை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது. மேலும், 5300 லூமென்ஸ் மற்றும் ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன் கிடைத்துள்ளது. எல்இடி (LED) லைட் சோர்ஸ் கொண்டுள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus) உள்ளது.
மேலும், ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டரில் கிடைக்கிறது. 1080p நேட்டிவ் ரெசொலூஷன் போக 4K சப்போர்ட் கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் லைசென்ஸ் (Netflix License) கொண்டுள்ளது. ஆகவே, இன்-பில்ட் நெட்பிளிக்ஸ் ஓடிடி கிடைக்கிறது. மேலும், யூடியூப் (Youtube), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கிடைக்கிறது.
பில்ட்-இன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Built-in Android OS) கிடைத்துள்ளது. ஆகவே, வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screes Mirroring) கிடைக்கிறது. மேலும், டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி ஆதரவை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் ஏயுஎக்ஸ் (AUX) சப்போர்ட் கொடுத்துள்ளது.
ப்ளூடூத் ஆடியோ அவுட்புட் (Bluetooth Audio Output) மற்றும் பில்ட்-இன் 3W ஸ்பீக்கர் (Built-in 3W Speaker) கிடைக்கிறது. பெட்ரூம் மற்றும் லிவ்விங் ரூம்களுக்கு ஏற்ற மாடலாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் இருக்கிறது. வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) வழியாக ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்லெட்கள் (Tablets) உள்ளிட்ட டிவைஸ்களை இணைத்து கொள்ளலாம்.
அட்ஜஸ்டபிள் டில்ட்-ஆங்கிள் டிசைனில் (Adjustable Tilt-angl Design) டேபிள் டாப் போக அலமாரிகள் (Shelves) ஆகியவற்றிலும் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒயிட் (White) கலரில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 1817 கிாரம் எடையை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடல் கொண்டுள்ளது. ஆகவே, காம்பாக்ட் ப்ரொஜெக்டர் மாடலாக இது இருக்காது. எம்ஆர்பி விலை ஆனது ரூ.29,999ஆக இருக்கிறது.
இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.14,499 விலைக்கு இந்திய மார்கெட்டில் கிடைக்க உள்ளது. அமேசான் தளத்தில் வாங்கி கொள்ளலாம். மேலும், போர்ட்ரானிக்ஸ் தளத்திலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆஃப்லைன் ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்க உள்ளது. 1 வருட வாரண்டியை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 560 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடல் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








