Home
Gadgets

100-இன்ச் ப்ரொஜெக்டர் மாடலுக்கு நம்ப முடியாத ஆஃபர்.. ஆண்ட்ராய்டு டிவி OS.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 550 (Portronics Beem 550) ப்ரொஜெக்டர் ஆனது கடந்த மாதம் ரூ.9,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ப்ரொஜெக்டர் மாடல் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த சாதனத்தின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் தற்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தைக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

100-இன்ச் ப்ரொஜெக்டர் மாடலுக்கு நம்ப முடியாத ஆஃபர்..  எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 550 அம்சங்கள் (Portronics Beem 550 Specifications): 720பிக்சல்ஸ் நேட்டிவ் (Native) மற்றும் 1080பிக்சல்ஸ் சப்போர்ட் வழங்குகிறது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல். மேலும் 6000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness), 2000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (Contrast Ratio) ஆதரவும் இதில் உள்ளது.

அதுவும் 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio) உடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மூலம் 100 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 75-இன்ச், 98-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.

மேலும் டெலஸ்கோப் மோனோபாட் ஸ்டாண்டுடன் மடிக்கக்கூடிய வடிவமைப்புடன் இந்த புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் வெளிவந்துள்ளது. டேபில்டாப், சுவர் மற்றும் சீலிங் போன்ற இடங்களில் இந்த ப்ரொஜெக்டர் மாடலை பயன்படுத்த முடியும்.

ஆட்டோ ஃபோகஸ் (Auto focus) ஆதரவு, ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), 70 mm ஆட்டோ-ஃபோகஸ் லென்ஸ் (auto-focus lens), trapezoid கரெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புத்தம் புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 550 ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.

100-இன்ச் ப்ரொஜெக்டர் மாடலுக்கு நம்ப முடியாத ஆஃபர்..  எந்த மாடல்?

குறிப்பாக ஆண்ட்ராய்டு டிவி (Android TV) ஓஎஸ் மூலம் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் இயங்குகிறது. பின்பு நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (built-in OTT apps) இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் வெளிவந்துள்ளது.

அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AUX, இயர்போன் அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பில்ட்-இன் 5W பாட்டம் மவுண்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Beem 550 Smart LED Projector price slashed on Amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X