யாரு சாமி நீ.. ரூ.9,999-க்கு 100-இன்ச்.. ஆண்ட்ராய்டு டிவி OS.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆட்டோ ஃபோகஸ்.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ப்ரொஜெக்டர் மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய ப்ரொஜெக்டர் மாடல் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது போர்ட்ரானிக்ஸ் பீம் 550 (Portronics Beem 550) ப்ரொஜெக்டர் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 550 அம்சங்கள் (Portronics Beem 550 Specifications): டெலஸ்கோப் மோனோபாட் ஸ்டாண்டுடன் மடிக்கக்கூடிய வடிவமைப்புடன் இந்த புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் டேபில்டாப், சுவர் மற்றும் சீலிங் போன்ற இடங்களில் இந்த ப்ரொஜெக்டர் மாடலை பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இது 720p நேட்டிவ் (Native) உடன் 1080p ஆதரவை வழஙகுகிறது. அதேபோல் 6000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness), 2000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (Contrast Ratio), 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இதன் மூலம் துல்லியமான மற்றும் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.
குறிப்பாக இது ஒரு எல்இடி ப்ரொஜெக்டர் ஆகும். மேலும் இதில் 100 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். எனவே பெரிய டிவி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக இது பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
70 mm ஆட்டோ-ஃபோகஸ் லென்ஸ் (auto-focus lens), ஆட்டோ ஃபோகஸ் (Auto focus) ஆதரவு, ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), trapezoid கரெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புத்தம் புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 550 ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு டிவி (Android TV) ஓஎஸ் மூலம் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் இயங்குகிறது. பின்பு பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (built-in OTT apps) இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடல் வெளிவந்துள்ளது.

டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AUX, இயர்போன் அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போர்ட்ரானிக்ஸ் பீம் 550 மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பில்ட்-இன் 5W பாட்டம் மவுண்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.
தற்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 550 ப்ரொஜெக்டர் மாடல் ஆனது ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் போர்ட்ரானிக்ஸ்.காம் தளத்தில் இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








