Home
Gadgets

அடேய் சாமி.. ரூ.7999-க்கு 100 இன்ச்.. 4K எச்டிஆர்.. ஆட்டோ கீஸ்டோன்.. 3W ஸ்பீக்கர்.. டர்போ கூலிங்.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட் டிவி பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் 100 இன்ச் ப்ரொஜெக்சன் கொண்ட போர்ட்ரானிக்ஸ் பீம் 540 (Portronics Beem 540) ப்ரொஜெக்டர் வெளியாகி இருக்கிறது. டூயல்-டர்போ கூலிங் சிஸ்டம், 4K எச்டிஆர் கன்டென்ட் பீச்சர்களை கொடுக்கிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 540 மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பட்ஜெட் விலையில் ப்ரொஜெக்டர் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பீம் மாடல்கள் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. ஏனென்றால், ரூ.10,000 மற்றும் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் பல்வேறு மாடல்களை களமிறங்கி இருக்கிறது. இப்போது, போர்ட்ரானிக்ஸ் பீம் 540 மாடலை அறிமுக சலுகையுடன் வெளியிட்டு இருக்கிறது.

அடேய் சாமி.. ரூ.7999-க்கு 100 இன்ச்.. 4K எச்டிஆர்.. ஆட்டோ கீஸ்டோன்!

போர்ட்ரானிக்ஸ் பீம் 540 அம்சங்கள் (Portronics BEEM 540 Specifications): இந்த பீம் மாடலில் அட்ஜட்ஸ்டபிள் ஆங்கிள் (Adjustable Angle) மற்றும் சீலிங் மவுண்ட்பிள் (Ceiling Mountable) சப்போர்ட் கிடைக்கிறது. 100 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுக்கிறது. இதில் 720p (1024 x 720 பிக்சல்கள்) நேட்டிவ் ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 4K எச்டிஆர் (HDR) சப்போர்ட் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) உள்ளது.

ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கிடைக்கிறது. ஆகவே, எலக்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) மற்றும் ஸ்மார்ட் வெர்டிகல் கீஸ்டோன் கரெக்சன் (Smart Vertical Keystone Correction) வருகிறது. 4000 லுமென்ஸ் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். 30,000 மணி நேரங்களுக்கான லாம்ப் லைப் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் டூயல் டர்போ கூலிங் சிஸ்டம் (Dual-turbo Cooling System) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமல்லாமல், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube) மற்றும் பிரைம் வீடியோ (Prime Video) போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்களை கொடுக்கிறது. 3W சவுண்ட் அவுட்புட் கொண்ட பில்-இன் ஸ்பீக்கர் கிடைக்கிறது. இதுபோக ஏயுஎக்ஸ் (AUX) ஆடியோ அவுட் எடுத்து கொள்ளலாம். இப்போது கனெக்டிவிட்டியை தெரிந்து கொள்ளாலம்.

அடேய் சாமி.. ரூ.7999-க்கு 100 இன்ச்.. 4K எச்டிஆர்.. ஆட்டோ கீஸ்டோன்!

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 540 ப்ரொஜெக்டர் மாடலில் வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் எச்டிஎம்ஐ (HDMI) போன்ற கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ஒயிட் கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. சீலிங் மவுண்ட்பிள் மட்டுமல்லாமல், டேபிள் மவுண்ட், வால் மவுண்ட் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். அதற்கான ஸ்டாண்ட் கிடைக்கிறது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 540 விலை (Portronics BEEM 540 Price): இந்த 100 இன்ச் பீம் மாடலின் மார்கெட் விலையானது ரூ.9,499ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1,500 அறிமுக சலுகை போக வெறும் ரூ.7,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதேபோல போர்ட்ரானிக்ஸ் வெப்சைட், பிளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ரீடெயில் ஸ்டோர்களிலும் இது ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் பல்வேறு மாடல்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. அதேபோல போர்ட்ரானிக்ஸ் பீம் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கும் டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கின்றன. இந்த நேரத்தில் புதிய பீம் 540 மாடல் களமிறங்கி இருப்பதால், அறிமுக சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதற்கு எந்தவித கார்டுகளும் தேவையில்லை. நேரடியாக ரூ 7,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics BEEM 540 With Electronic Focus Launched Under Rs 8000 in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X