பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ரூ.6699 பட்ஜெட்ல 4K சப்போர்ட்.. ஆண்ட்ராய்டு 13 OS.. ஆஃபரில் ப்ரொஜெக்டர்!
அமேசான் தளத்தில் அல்ட்ரா எச்டி 4கே சப்போர்ட் கொண்ட போர்ட்ரானிக்ஸ் பீம் 540 (Portronics BEEM 540) ப்ரொஜெக்டர் மாடல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 540 சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் (amazon) தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 540 ப்ரொஜெக்டர் மாடலுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை ரூ.6699 விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 540 அம்சங்கள் (Portronics BEEM 540 Specifications): அதாவது போர்ட்ரானிக்ஸ் பீம் 540 மாடல் ஆனது 100 இன்ச் ப்ரொஜெக்சன் சைஸ் கொடுக்கிறது. எனவே 65-இன்ச், 75-இன்ச் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 540 மாடலில் 4K எச்டிஆர் (HDR) சப்போர்ட், 720p (1024 x 720 பிக்சல்ஸ்) நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவுகள் உள்ளன. எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல்.
அட்ஜட்ஸ்டபிள் ஆங்கிள் (Adjustable Angle), சீலிங் மவுண்ட்பிள் (Ceiling Mountable) ஆதரவுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 540 மாடல். பின்பு இந்த சாதனத்தில் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), எலக்ட்ரானிக் போகஸ் (Electronic Focus), ஸ்மார்ட் வெர்டிகல் கீஸ்டோன் கரெக்சன் (Smart Vertical Keystone Correction) போன்ற வசதிகளும் உள்ளன.
அதுவும் 4000 லுமென்ஸ் (4000 Lumens) பிரைட்னஸ் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே இதன் மூலம் சிறந்த பிரைட்னஸ் வசதியுடன் தெளிவான படங்களைப் பார்க்க முடியும். பின்பு இதில் 30,000 மணி நேரங்களுக்கான லாம்ப் லைப் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) இயங்குகிறது.

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற அசத்தலான ஓடிடி ஆப்களை இந்த ப்ரொஜெக்டர் மூலம் பயன்படுத்த முடியும். மேலும் இந்த சாதனத்தில் டூயல் டர்போ கூலிங் சிஸ்டம் (Dual-turbo Cooling System) ஆதரவும் உள்ளது.
3W சவுண்ட் அவுட்புட், பில்-இன் ஸ்பீக்கர், ஏயுஎக்ஸ் (AUX) ஆடியோ அவுட், வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), எச்டிஎம்ஐ (HDMI) போன்ற பல சிறப்பான வசதிகள் போர்ட்ரானிக்ஸ் பீம் 540 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ஒரு ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் மாடல் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








