ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆட்டோ கீஸ்டோன்.. 150 இன்ச்.. ஆஃபரில் Portronics புரொஜெக்டர்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் (Portronics Beem 530 Smart LED Projector) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் புரொஜெக்டர் ஆனது 15W ஸ்பீக்கர்கள், ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஃபுல் எச்டி ரெசல்யூஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. போர்ட்ரானிக்ஸ் பீம் 530 புரொஜெக்டர் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 530 மாடலை ரூ.23749 விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 530 Smart LED Projector Specifications): 1080பிக்சல் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய புரொஜெக்டர். எனவே போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் உதவியுடன் துல்லியமான வீடியோ காட்சிகளைப் பார்க்க முடியும்.
7600 லூமென்ஸ் எல்இடி பிரைட்னஸ்(7600 Lumens Maximum Brightness) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 50 இன்ச் முதல் 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இந்த புரொஜெக்டர் மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 55 இன்ச், 75 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். மேலும் ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps) வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
எனவே ஒடிடி-இல் வெளியாகும் புதிய படங்களை இதன் உதவியுடன் சிறந்த தரத்தில் பார்க்க முடியும்.
அதாவது யூடியூப் (YouTube), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), அமேசான் பிரைன் வீடியோ (Amazon Prime Video), சோனி லைவ் (SonyLiv), மற்றும் ஜீ5 (Zee5) போன்ற பல ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும். பின்பு இந்த புரொஜெக்டர் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. புளூடூத், வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புரொஜெக்டர் மாடலில் உள்ளன.
வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். மேலும் இதில் 15W ஸ்பீக்கர்கள் வசதியும் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 530 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








