Home
Gadgets

அள்ளி கொடுக்கும் அமேசான்.. 105 இன்ச்.. OTT.. ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 75 சதவீத தள்ளுபடி.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனத்தின் ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் ஒன்று தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 105 இன்ச் வரையில் புரொஜெக்சன் சைஸ், ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன், டெலஸ்கோபிக் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த ப்ரொஜெக்டர் சாதனம் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் (Amazon) தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் (Portronics Beem 520 Smart LED Projector) மாடலுக்கு 74 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,299 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்டெல் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 75 சதவீத தள்ளுபடி.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 520 Specifications): இது ஒரு எல்இடி (LED) ப்ரொஜெக்டர் ஆகும். அதுவும் 62 இன்ச் முதல் 105 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே பெரிய 85 இன்ச், 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக இது பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் 1080P பிக்சல்ஸ், 720p எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் (720p native resolution) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. எனவே இதன் மூலம் துல்லியமான மற்றும் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

குறிப்பாக பில்ட்-இன் டெலஸ்கோபிக் ஸ்டாண்ட் (Built-in Telescopic Stand) உடன் இந்த ப்ரொஜெக்டர் வருகிறது. இதை சீலிங் அல்லது டேபிள் என அனைத்து இடங்களிலும் வைத்துப் பயன்படுத்த முடியும். அதேபோல் 2200 Lumens (2200 லூமென்ஸ்), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஆட்டோமேட்டிக் வெர்டிகல் ஸ்கிரீன் கரெக்சன் (Automatic Vertical Screen Correction) ஆதரவும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 3W ஸ்பீக்கர் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும்
அருமையாக உள்ளது.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஏயூஎக்ஸ் (AUX) போர்ட், ப்ளூடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற OTT ஆப்களை இதன் மூலம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை நிறத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 (Portronics Beem 520) ப்ரொஜெக்டர் வாங்க கிடைக்கிறது. அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Beem 520 Smart LED Projector 75 percent discount on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X