பொட்டி வந்தாச்சு.. ரூ.5,499 பட்ஜெட்ல 105 இன்ச்.. 4K வீடியோ.. ஆட்டோ கீஸ்டோன்.. OTT.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் ப்ரொஜெக்டர் மாடல்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 105 இன்ச் வரையில் புரொஜெக்சன் வழங்கும் ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது தற்போது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் (Portronics Beem 520 Smart LED Projector) மாடலுக்கு 72 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 520 Specifications): குறிப்பாக இது ஒரு எல்இடி (LED) ப்ரொஜெக்டர் ஆகும். அதுவும் 62 இன்ச் முதல் 105 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். எனவே பெரிய 100 இன்ச் டிவியே வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக இது பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1024 x 720 பிக்சல்ஸ், 720p எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் (720p native resolution), 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. எனவே இதன் மூலம் துல்லியமான மற்றும் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.
பில்ட்-இன் டெலஸ்கோபிக் ஸ்டாண்ட் (Built-in Telescopic Stand) உடன் இந்த ப்ரொஜெக்டர் வருகிறது. இதை சீலிங் அல்லது டேபிள் என அனைத்து இடங்களிலும் வைத்துப் பயன்படுத்த முடியும். குறிப்பாக 2200 Lumens (2200 லூமென்ஸ்), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ஆட்டோமேட்டிக் வெர்டிகல் ஸ்கிரீன் கரெக்சன் (Automatic Vertical Screen Correction) ஆதரவும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 3W ஸ்பீக்கர் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மேலும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஏயூஎக்ஸ் (AUX) போர்ட், ப்ளூடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்களை இதன் மூலம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை நிறத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 (Portronics Beem 520) ப்ரொஜெக்டர் வாங்க கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே, 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) சப்போர்ட், 2200 லூமென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications