Home
Gadgets

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? டால்பி ஆடியோ.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் 4கே சப்போர்ட் கொண்ட போர்ட்ரானிக்ஸ் பீம் 510 (Portronics Beem 510) ப்ரொஜெக்டர் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 (Portronics Beem 510) ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடலை ரூ.16499 விலையில் வாங்கிவிட முடியும்.

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு?  ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 510 அம்சங்கள் (Portronics Beem 510 Specifications): போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்டுள்ளது இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல். 1080p ஃபுல் HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் 4K அல்ட்ரா HD ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 மாடல். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டரில் 5300 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது தரமான பிக்சர் குவாலிட்டி வழங்கும். அதுவும் கேமிங், திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோமேட்டிக் போகஸ், மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் உடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் வெளிவந்தது.

ஸ்மார்ட் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் முக்கியமான ஸ்ட்ரீமிங் ஆப்களை இந்த ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு?  ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட் (Input And Output Ports), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், லேன் (LAN) போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Beem 510 is available at a 49 percent discount on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X