வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் 4K சப்போர்ட் கொண்ட போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட்டில் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 (Portronics Beem 510) ப்ரொஜெக்டர் மாடலுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடலை மிகவும் கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 510 அம்சங்கள் (Portronics Beem 510 Specifications): 1080p ஃபுல் HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் 4K அல்ட்ரா HD ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 மாடல். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்டுள்ளது இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டரில் 5300 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது தரமான பிக்சர் குவாலிட்டி வழங்கும். அதுவும் கேமிங், திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும்.
குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோமேட்டிக் போகஸ், மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் உடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் வெளிவந்தது.
அதேபோல் ஸ்மார்ட் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் முக்கியமான ஸ்ட்ரீமிங் ஆப்களை இந்த ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும்.
அதுவும் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட் (Input And Output Ports), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், லேன் (LAN) போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
சிறப்பான அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications