இனி டிவியே வேண்டாம்.. 32ஜிபி மெமரி.. 8K சப்போர்ட்.. 120 இன்ச்.. அறிமுகமானது தரமான புரொஜெக்டர்.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனத்தின் புரொஜெக்டர் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் மேம்பட்ட புதிய தொழில்நுட்ப வசதியுடன் புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்கின்றன. எனவே தான் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புரொஜெக்டர் மாடலும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் (Portronics Beem 500 Smart LED Projector) மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது போர்ட்ரானிக்ஸ். குறிப்பாக இந்த புதிய புரொஜெக்டர் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 500 மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 500 Smart LED Projector Specifications): 8K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் மற்றும் 1080பிக்சல் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய புரொஜெக்டர். எனவே போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் உதவியுடன் துல்லியமான வீடியோ காட்சிகளைப் பார்க்க முடியும்.
6700 லூமென்ஸ் எல்இடி லேம்ப் (6700 Lumens LED lamp) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection)செய்து கொள்ள முடியும். எனவே இந்த புரொஜெக்டர் மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த சாதனத்தில் உள்ளது.
கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல். மேலும் ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps)வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. எனவே ஒடிடி-இல் வெளியாகும் புதிய படங்களை இதன் உதவியுடன் சிறந்த தரத்தில் பார்க்க முடியும்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. பெஸ்ட் ஸ்கிரீனிங் அனுபவத்துக்காக இன்டலிஜென்ஸ் ஆட்டோமேட்டிக் அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் ((Intelligent Automatic Obstacle Avoidance) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம்.
அம்லாஜிக் டி972 சிப்செட் (Amlogic T972 Chipset) உடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் 16W பில்ட்-இன் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான புரொஜெக்டர். எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். அதேபோல் வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் கண்ட்ரோல் (Voice Enabled Remote Control) கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர்.

புளூடூத், வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் ஆண்ட்ராய்டு 9 (Android 9) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. பின்பு முழுமையாக சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் என்ஜின் வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர்.
கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலை வாங்க முடியும். மேலும் இந்த புரொஜெக்டர் விலை ரூ.23,999-ஆக உள்ளது. அமேசான், பிளிப்கார்ட், போர்ட்ரானிக்ஸ் தளங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது.
photo credit: portronics.com, fonearena


Click it and Unblock the Notifications








