வீட்டுக்குள்ள 8K தியேட்டர்.. 120 இன்ச்.. ஆரம்பமே 40% தள்ளுபடி.. உடனே வாங்க பெஸ்ட் ப்ரொஜெக்டர் இதான்.. விலை?
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக போர்ட்ரோனிக்ஸ் பீம் 500 ப்ரொஜெக்டர் (Portronics Beem 500 projector) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரொஜெக்டர் 40" இன்ச் முதல் 120" இன்ச் டிஸ்பிளே அளவிலான படத்தை ப்ராஜெக்ட் செய்கிறது. இந்தியாவில் இப்போது ப்ரொஜெக்டர் (Projector) வாங்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. என்ன தான் ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்மார்ட் டிவி இருந்தாலும் கூட, வீட்டிலேயே தியேட்டர் போன்ற அனுபவத்தை அனுபவிக்க மக்கள் இப்போது ப்ரொஜெக்டர் சாதனங்களை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
போர்ட்ரோனிக்ஸ் பீம் 500 ப்ரொஜெக்டர் (Portronics Beem 500 projector) சாதனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய போர்ட்ரோனிக் ப்ரொஜெக்டர் டிவைஸ் (Portronics Projector) 1080p LED மாடல் ப்ரொஜெக்டராக வெளிவந்துள்ளது. இந்த சாதனம் 67000 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens brightness) உடன் மிகவும் பிரகாசமான ப்ரொஜெக்டராக வெளிவந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு (Android OS) இயங்குதளத்துடன் இயங்குகிறது.

வீட்டுக்குள்ள 8K தியேட்டர்.. 120 இன்ச்.. ஆரம்பமே 40% தள்ளுபடி:
இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் பீம் 500 ப்ரொஜெக்டர் (Portronics Beem 500 projector) சாதனம் பில்ட் இன் ஸ்பீக்கர் (built-in speakers) உடன் இமேஜ் பெர்பெக்ட்டிங் டூல்ஸ் (image-perfecting tools) மற்றும் ஆட்டோ போகஸ் (automatic focus) அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ப்ரொஜெக்டர் சாதனம் 40" இன்ச் முதல் 120" இன்ச் வரை படங்களை 8K தரத்தில் ப்ராஜெக்ட் செய்கிறது.
நீங்கள் செட் செய்யும் டிஸ்பிளே அளவிற்கு ஏற்ப, இந்த ப்ரொஜெக்டரில் உள்ள இன்டலிஜெண்ட் அலைன்மெண்ட் அம்சம் மற்றும் ஆட்டோஃபோக்கஸ் அம்சமத்துடன் கீஸ்டோன் கரெக்ஷன் அம்சம் ஆகியவை இணைந்து, உங்கள் டிஸ்பிளே அளவிற்கு ஏற்ற சிறப்பான கிளாரிட்டியை வழங்குகின்றன. இதன் மூலம் உங்களுக்கு மிகவும் துல்லியமான விசுவல் காண்பிக்கப்படுகிறது. இது 2GB ரேம் (RAM) மற்றும் 32GB ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது.
போர்ட்ரோனிக்ஸ் பீம் 500 ப்ரொஜெக்டர் (Portronics Beem 500 projector):
இந்த Portronics Beem 500 LED projector சாதனம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதத்துடன் இயங்குகிறது. இது உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS உள்ளடக்கங்களை ப்ராஜெக்ட் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக, Netflix, YouTube and Prime Video போன்ற பிரபலமான OTT தளங்களின் உள்ளடக்கங்களையும் ப்ராஜெக்ட் செய்கிறது. இது தவிர HDMI, USB-A, Ethernet, மற்றும் AUX வழியாக எக்ஸ்டர்னல் சாதனங்களையும் இத்துடன் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
இந்த புதிய Portronics Beem 500 projector வைஃபை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) இணைப்புடன் இயங்குகிறது. இதில் 16W ஸ்பீக்கர் (speaker) உள்ளது. இந்த சாதனத்தை வாய்ஸ் கண்ட்ரோல் (voice command control) மூலம் கட்டுப்படுத்தலாம் அல்லது ரிமோட் (remote controller) மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். இதன் விலை பற்றி பேசலுகையில், இது இந்தியாவில் 40% சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
போர்ட்ரோனிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் விலை (Portronics Beem 500 Smart Projector Price):
போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்த Portronics Beem 500 projector சாதனத்தை ரூ. 39,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 40% சலுகைக்கு பிறகு, தற்போது இதன் விலை ரூ. 23,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை இன்னும் எத்தனை நாட்களுக்கு கிடைக்குமென்பது சரியாக தெரியவில்லை. ஆகையால் முந்திக்கொள்பவர்களுக்கு லாபம் நிச்சயம்.


Click it and Unblock the Notifications








