இறங்கி அடிச்ச பிளிப்கார்ட்.. 200 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, புரொஜெக்டர், லேப்டாப், டேப்லெட் எனப் பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கும் பிளிப்கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த அதிநவீன புரொஜெக்டர் மாடலை வாங்க இதுதான் சரியான நேரம். இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலின் அம்சங்களை பார்க்கலாம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 460 அம்சங்கள் (Portronics Beem 460 Specifications):இது எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடலாகும். எனவே இதைப் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். அதோடு 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசல்யூஷன் மற்றும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ்(Lumens Brightness) ஆதரவு கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடல்.

அதேபோல் இதில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) ஆதரவு கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடல். மேலும் இதில் 40 இன்ச் முதல் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன்(Projection) செய்து கொள்ள முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் இந்த சாதனம்.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) மூலம் கனெக்ட் செய்து கொள்ள செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர கேமிங் கன்சோல் (gaming console) ஹார்டு டிரைவ் (Hard Drive) உள்ளிட்ட பல ஆதரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) உள்ளிட்ட சிறப்பான வசதிகளும் இதில் உள்ளது. மேலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் (டீடரநவழழவா ஊழெநெஉவைஎவைல) இதில் இருக்கிறது.
குறிப்பாக எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடல்.


Click it and Unblock the Notifications








