வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 200 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. Amazon ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 (Portronics Beem 460) புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை இன்னும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் அம்சங்கள் ( Portronics Beem 460 Specifications): அதாவது இது எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசல்யூஷன் மற்றும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவு கொண்டுள்ளது இந்த தரமான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல்.
அதேபோல் மேம்பட்ட தரமான பிக்சர் குவாலிட்டி வழங்கும் இந்த பீம் 460 புரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) கிடைக்கிறது.
குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் 40 இன்ச் முதல் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். 200 இன்ச் டிஸ்பிளே அளவு கிடைப்பதால் ஸ்மார்ட் டிவி பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் இந்த புரொஜெக்டர் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேமிங் கேமிங் கன்சோல் (gaming console), ஹார்டு டிரைவ் (Hard Drive) போன்றவற்றை கனெக்ட் இதில் செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத், வைஃபை, இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்தது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர். மேலும் இந்த புரொஜெக்டர் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஆனது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. எனவே இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.மேலும் 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








