250" இன்ச் HD டிஸ்பிளே.. ரூ.25,000 தள்ளுபடி.. ரூ.9000-க்கு இப்படியொரு Projector-ஆ? ஸ்மார்ட் டிவிலாம் கிளோஸ்..
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனத்தின் சக்தி வாய்ந்த 250" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட ப்ரொஜெக்டர் (Projector) சாதனம் இப்போது மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. முதல் முறையாக இந்த சாதனம் வெறும் ரூ. 9999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது அமேசான் (அமேசான்) நிறுவனத்தின் சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக, இந்த ப்ரொஜெக்டர் மீது 71% தள்ளுபடி (Discount) அறிவிக்கப்ட்டுள்ளது. யாருமே நினைச்சு கூட பார்க்காத விலையில், இதில் என்னென்ன அம்சங்கள் நிறைந்திருக்கிறது தெரியுமா? விஷயம் தெரிஞ்சா ஸ்மார்ட் டிவியே (Smart TV) வேண்டாம்னு சொல்லிடுவாங்க மக்களே.
போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள ஒரு அட்டகாசமான ப்ரொஜெக்டர் சாதனம் தான் இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 420 எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 420 LED Projector) டிவைஸ். இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 420 எல்இடி ப்ரொஜெக்டர் போர்ட்டபிள் டிசைன் வடிவமைப்புடன் 995 கிராம் எடையுடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல அனுமதிக்கும் சிறிய அளவில் வெளிவந்துள்ளது.

போர்ட்ரோனிக்ஸ் பீம் 420 எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 420 LED Projector):
இந்த அட்டகாசமான போர்ட்ரோனிக்ஸ் பீம் 420 எல்இடி ப்ரொஜெக்டர் சாதனத்தை பயன்படுத்தி நீங்கள் 30" முதல், 90 இன்ச் மற்றும் 250" இன்ச் டிஸ்பிளே வரை படங்களை ப்ராஜெக்ட் செய்து மகிழலாம். 250" இன்ச் டிஸ்பிளே வரையிலும் போர்ட்ரோனிக்ஸ் பீம் 420 எல்இடி ப்ரொஜெக்டர் மிகவும் துல்லியமான படங்களை பிரதிபலிக்கிறது. இதுவொரு முழு Full HD ப்ரொஜெக்டர் என்பதனால் கிளாரிட்டி பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம்.
இந்த போர்ட்ரோனிக்ஸ் பீம் 420 எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 420 LED Projector) சாதனத்தின் அசல் விலை ரூ. 34,999 ஆகும். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமேசான் சிறப்பு தள்ளுபடியின் மூலம் இதன் விலை ரூ. 9,999 விலை புள்ளி வரை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் உங்களுக்கு முழுமையாக ரூ. 25,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ட்ரோனிக்ஸ் பீம் 420 எல்இடி ப்ரொஜெக்டர் (Portronics Beem 420 LED Projector) சாதனத்தில் 3200 லுமென்ஸ், 1080p முழு எச்டி நேட்டிவ், ஸ்கிரீன் மிரரிங், 5W ஸ்பீக்கர், 30,000 மணி நேர LED லைட் ஆயுள், என்று இன்னும் பல அம்சங்களை இந்த ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது. இந்த ப்ரொஜெக்டரில் என்னென்ன அம்சங்கள் நிறைந்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
250" இன்ச் டிஸ்பிளே அளவு வரை தெளிவான படம்.. ஸ்மார்ட் டிவிலாம் இனி வேஸ்ட்:
ரூ. 9999 விலையில் உங்களால் இப்போது அதிகபட்சமாக 32" இன்ச் ஸ்மார்ட் டிவியை தான் வாங்க முடியும். ஆனால், அதே நேரத்தில் இந்த ப்ரொஜெக்டரை வாங்கினால் 250" இன்ச் டிஸ்பிளே வரை உங்களால் படங்களை பார்க்க முடியும். 250" இன்ச் என்பது ஒரு சிறிய தியேட்டர் அளவு போன்றது. இந்த ப்ரொஜெக்டரில் HDMI மற்றும் USB போர்ட் அம்சமும் இருக்கிறது.
இதனால், கேபிள் டிவி செட் டாப் பாக்ஸை கூட நீங்கள் இதனுடன் இணைத்து பெரிய திரையில் நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம். இந்த புரொஜெக்டரில் உங்களுடைய ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) மூலம் கூட கனெக்ட் செய்து படங்களை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications