இதுதான் ஆஃபர்.. 200 இன்ச்.. 8GB மெமரி.. குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410(Portronics Beem 410) புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 மாடலுக்கு 66 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளபடியும் உள்ளது. எனவே ரூ.10499 விலையில் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 மாடலை வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 410 அம்சங்கள் (Portronics Beem 410 Specifications): இது ஒரு தரமான எல்இடி (LED) ஸ்மார்ட் புரொஜெக்டர் ஆகும். அதேபோல் 1920 x 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர். மேலும் இந்த புரொஜெக்டரில் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (250 ஏஎன்எஸ்ஐ), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) உள்ளது .
இதுதவிர 16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த சாதனம்.
6W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் ஆதரவு கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்தது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் இதில் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த புரொஜெக்டர் மாடலை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. மேலும் ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. மேலும் இதில் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் பிளாக் (Black) கலரில் வாங்கக் கிடைக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








