வெளுத்துக் கட்டும் அமேசான்.. 160 இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் (Portronics) ப்ரொஜெக்டர் மாடல் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது தற்போது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 (Portronics Beem 400) ப்ரொஜெக்டர் மாடலுக்கு 63 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,151 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 அம்சங்கள் (Portronics Beem 400 Specifications): இது எல்இடி (LED) ப்ரொஜெக்டர் ஆகும். மற்ற ப்ரொஜெக்டர் மாடல்களை விட மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். குறிப்பாக இதன் மூலம் சிறந்த திரை அனுபவத்தைப் பெறமுடியும்.
குறிப்பாக இதில் 1080p எச்டி (HD) ரெசல்யூஷன் மற்றும் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. எனவே இதில் தெளிவான படங்களைப் பார்க்க முடியும். மேலும் இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். பின்பு இந்த சாதனத்தில் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டரில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வழங்குகிறது. பின்பு இதில் 160 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ப்ரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த புரொஜெக்டரில் மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் உள்ளன.

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் பென்டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் ஹெட்போன் (Head phone), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
அதுவும் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 ப்ரொஜெக்டர் மாடலில்வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) ஆதரவும் உள்ளன. பின்பு 6 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (6W Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 ப்ரொஜெக்டர் மாடல். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications