பிளிப்கார்ட் அதிர போகுது.. ரூ.9899 பட்ஜெட்ல 160 இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்..
இந்தியாவில் போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடல்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் புரொஜெக்டர்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடல் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 (Portronics Beem 400) எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யபப்ட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1200 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ.9899 விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 அம்சங்கள் (Portronics Beem 400 Specifications): இது எல்இடி (LED) ஆதரவு கொண்ட தரமான புரொஜெக்டர் ஆகும். மற்ற புரொஜெக்டர் மாடல்களை விட மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். குறிப்பாக இதன் மூலம் நாம் சிறந்த திரை அனுபவத்தைப் பெறமுடியும்.
இதில் 1080p எச்டி (HD) ரெசல்யூஷன் மற்றும் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. எனவே இதில் தெளிவான படங்களைப் பார்க்க முடியும். மேலும் இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். பின்பு இந்த சாதனத்தில் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டரில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வழங்குகிறது. பின்பு இதில் 160 இன்ச் வரையில் புரோஜெக்சன்(Projection) செய்து கொள்ள முடியும். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த புரொஜெக்டரில் மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் உள்ளன.
பென்டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். மேலும் ஹெட்போன் (Head phone), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலில்வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) ஆதரவும் உள்ளன. பின்பு 6 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (6W Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்த 2025-ம் ஆண்டு போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








