வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 200 இன்ச்.. 8GB மெமரி.. ஆஃபரில் ஸ்மார்ட் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் ஆனது ஃபுல் எச்டி ரெசல்யூஷன், ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர் மாடலுக்கு தற்போது 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை ரூ.14,499 விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 300 அம்சங்கள் (Portronics Beem 300 Specifications): இது ஒரு எல்இடி புரொஜெக்டர் ஆகும். 1920X1080 பிக்சல்ஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் 4300 லுமன்ஸ் எல்இடி லேம்ப் அவுட்புட் மற்றும் பல்வேறு அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர். குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support), எல்இடி 250 லுமன்ஸ் ப்ரைட் டிஸ்பிளே உள்ளிட்ட அசத்தலான அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 எல்இடி புரொஜெக்டர் வெளிவந்துள்ளதால் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும்.

குறிப்பாக இதில் எச்டிஎம்ஐ போர்ட், ஏயூஎக்ஸ்(AUX), யூஎஸ்பி (USB) போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பென்டிரைவ் சப்போர்ட் உள்ளது. இதுதவிர டூயல் பேண்ட் வை - பை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) மூலம் இந்த புரொஜெக்டர் இயங்குகிறது.
மேலும் இதில் லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். மற்ற புரொஜெக்டர்களை விட அதிக கனெக்டிவிட்டி அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர் மாடல்.

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 எல்இடி புரொஜெக்டர் 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர் மாடல். மேலும் இந்த புரொஜெக்டரில் 50 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது.
தரமான 10 வாட்ஸ் இன்-பில்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டு வெளிவந்துள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 என்ற எல்இடி புரொஜெக்டர். பின்பு நெட்ஃபிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடல் தற்போது சலுகை விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்நிறுவனம் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








