Home
Gadgets

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ஆட்டோ போகஸ்.. டால்பி ஆடியோ.. ChatGPT.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart SASA LELE எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் 4கே சப்போர்ட் கொண்ட போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடல் ஒன்று தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் (Portronics BeamX Shark Projector) மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14.708 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். ஆகவே இந்த சாதனத்தைக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics BeamX Shark Projector Specifications): 1080P ஃபுல் எச்டி சப்போர்ட் மற்றும் 4K சப்போர்ட் வழங்குகிறது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் 160000 lm பிரைட்னஸ் வசதி இதில் உள்ளது. இதுதவிர 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

3டி சப்போர்ட் மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். அதுவும் நெட்பிளிக்ஸ் சான்றளிக்கப்பட்டது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல்.

போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 98-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.

ஆட்டோ போகஸ் (Auto focus), AI 6D கீஸ்டோன், Intelligent Image Correction, டிஜிட்டல் கீஸ்டோன் கரெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உடன் போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த மாடலில் ChatGPT ஆதரவு உள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 13Whale OS மூலம் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடல் இயங்குகிறது. பின்பு ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (built-in OTT apps) இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

270 டிகிரி ரோட்டேஷன் (270 degree rotation) ஆதரவு கொண்டுள்ளது இந்தபோர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் ஸ்கிரீன் மிரரிங்கை ஆதரிக்கிறது இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர்.

வைஃபை 6, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AUX, இயர்போன் அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட பில்ட்-இன் 5W ஸ்பீக்கர்கள் உள்ளன. இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம்எக்ஸ் ஷார்க் ப்ரொஜெக்டர் மாடல் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Portronics BeamX Shark Projector available at 55 percent discount in Flipkart sasa lele sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X