Home
Gadgets

அதிரவிட்ட அமேசான்.. 4K வீடியோ.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 510 (Portronics Beem 510) ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடல் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசானில் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ஸ்மார்ட் புரொஜெக்டர் 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ.17499 விலையில் வாங்கிவிட முடியும்.

அதிரவிட்ட அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 510 அம்சங்கள் (Portronics Beem 510 Specifications): இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல் ஆனது போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்டுள்ளது . 1080p ஃபுல் HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் 4K அல்ட்ரா HD ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 மாடல். எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்கலாம்.

அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டரில் 5300 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது தரமான பிக்சர் குவாலிட்டி வழங்கும். அதுவும் கேமிங், திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த புரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோமேட்டிக் போகஸ், மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் உடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்பாக ஸ்மார்ட் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் முக்கியமான ஸ்ட்ரீமிங் ஆப்களை இந்த புரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும்.

அதுவும் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

அதிரவிட்ட அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட் (Input And Output Ports), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், லேன் (LAN) போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர் மாடலில் உள்ளன.

மேலும் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலில் புளூடூத் மற்றும் வைஃபை ஆதரவும் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல். அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Beam 510 Projector available at discounted price on Amazon: check new price here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X