Home
Gadgets

போட்டான் பாருங்க.. ரூ.1999 க்கு 10000mAh பேட்டரி.. Portronics ஏரோ 10 பவர் பேங்க்.. கூடவே வருது டைப்-சி கேபிள்!

எவ்வளவு பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்து இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக சார்ஜ் பத்தாமல் போகலாம். இதனாலேயே பவர் பேங்க் மீதான வரவேற்பு சற்றும் குறையாமல் இருக்கிறது. இதில் 10000mAh பேட்டரியுடன் களமிறங்கிய போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 (Portronics Aero 10) மாடல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 10000mAh பவர் பேங்க் மாடலானது ரூ.1999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.1899 விலைக்கு இந்த போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 10000mAh பவர் பேங்க் மாடலை வாங்கி கொள்ளலாம்.

போட்டான் பாருங்க.. ரூ.1999 க்கு 10000mAh பேட்டரி.. Portronics ஏரோ 10!

இன்-பில்ட் டைப்-சி கேபிள் (inbuilt-Type-C cable) கிடைப்பதால், ஸ்மார்ட்போனை அவசரத்தில் சார்ஜ் செய்ய தனியாக டைப்-சி கேபிளை தேட வேண்டியது இருக்காது. இந்த கேபிளில் இன்புட் மட்டுமல்லாமல், அவுட்புட் எடுக்க முடியும். இதுபோக மற்றொரு டைப்-சி போர்ட் (Type-C Port) கிடைக்கிறது. இந்த போர்ட்டிலும் இன்புட் மற்றும் அவுட்புட் கிடைக்கும்.

ஆகவே, ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் என்று 2 டிவைஸ்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். காம்பாக்ட் டிசைனில் பவர் பேங்க் விரும்பும் பிரியர்களுக்கும் ஏற்றதாக இந்த போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 10000mAh பவர் பேங்க் இருக்கிறது. பில்ட்-இன் எல்இடி பேட்டரி இன்டிகேட்டர் (Built-in LED Battery Indicator) கிடைக்கிறது.

டிராவல் மற்றும் அவுட்டோரில் பயன்படுத்துவற்கு ஏற்ப லேன்யார்டு (Lanyard) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, எங்கு சென்றாலும் எளிதில் எடுத்து செல்லலாம். கையில் எடுத்து செல்வது இன்னும் சுலபமாக இருக்கும். பிளாக் (Black), நேவி ப்ளூ (Navy Blue) மற்றும் மோச்சா (Mocha) ஆகிய கலர்களில் இந்த போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 10000mAh பவர் பேங்க் விற்பனைக்கு கிடைக்கிறது.

போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 அம்சங்கள் (Portronics Aero 10 Specifications): 10000mAh பேட்டரி கேபாசிட்டி கொடுக்கிறது. 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. அவுட்புட் போர்ட்டில் யுஎஸ்பி டைப்-சி பிடி (USB Type-C PD) மற்றும் இன்புட் போர்ட்டில் யுஎஸ்பி டைப்-சி ( USB Type-C) கிடைக்கிறது. பில்ட்-இன் கேபிளும் டைப்-சி ஆக கொடுக்கப்பட்டு உள்ளது.

2 போர்ட்களிலும் இன்புட் மற்றும் அவுட்புட் கிடைக்கும். பேட்டரி இருப்பை தெரிந்து கொள்ள எல்இடி இன்டிகேட்டர் வருகிறது. இன்-பில்ட் டைப்-சி கேபிளை போலவே இன்டிகிரேடெட் லேன்யார்டு (Integrated Lanyard) கிடைக்கிறது. 2.2A அவுட்புட் கரென்ட் கிடைக்கிறது. 12V வோல்ட்டேஜ் கொண்டுள்ளது. பேட்டரி பவர்டு மாடலாக இருக்கிறது.

ஆகவே வழக்கம் போல எலக்ட்ரிசிட்டி சார்ஜிங் செய்து கொள்ளலாம். மொத்தமாக 245 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 10000mAh பவர் பேங்க் இருக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன்களைவிட கொஞ்சம் எடை அதிகமாக இருக்கும். இருப்பினும், 10000mAh கேபாசிட்டிக்கு இது போதுமான எடையாகவே இருக்கிறது.

12 மாதங்கள் வாரண்டியுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் ஏரோ 10 10000mAh பவர் பேங்க் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் ரூ. 2,499 விலைக்கு வெளியானது. இருப்பினும், தள்ளுபடி விலையான ரூ.1999 க்கு இப்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் மட்டுமல்லாமல், அமேசான், போர்ட்ரானிக்ஸ் ஆகிய தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Portronics Aero 10 10000mAh Power Bank With 20W Fast Charging Available At 20 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X