POCO தடாலடி.. 12.1 இன்ச் பெரிய 2.5K டிஸ்பிளே.. தருமாறு அம்சம்.. பவர்ஹவுஸ் டேப்லெட் விரைவில்.. என்ன விலை?
சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட்டான போக்கோ (POCO) அதன் முதல் டேப்லெட் (Tablet) சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது போல் தெரிகிறது. அண்மையில் போக்கோ பிராண்டிங் பெயருடன் ஒரு டேப்லெட் சாதனம் EEC சான்றிதழ் பக்கத்தில் காணப்படுள்ளது.
போக்கோ நிறுவனம் அதற்கு சொந்தமான முதல் டேப்லெட் சாதனத்தை விரைவில் சந்தைப்படுத்தவுள்ளது போல தெரிகிறது. ஐரோப்பா எலக்ட்ரானிக்ஸ் சான்றிதழ் EEC தளத்தில் டேப்லெட் பிராண்ட் போகோ மாடல் (Tablet brand POCO model) என்ற பெயரை தெள்ளத்தெளிவாக குறிப்பிடும் மாடல் பெயர் கொண்ட டேப்லெட் சாதனம் காணப்பட்டுள்ளது. இந்த சாதனத்துடன் போக்கோ டேப்லெட் சந்தைக்குள் உள்நுழைவது உறுதியாகியுள்ளது.

போகோவின் முதல் டேப்லெட் சாதனம் போகோ பேட் (POCO's First Tablet Device POCO Pad):
இந்த போகோ டேப்லெட் (POCO Tablet) உடன் இணக்கமான சில ஆக்ஸஸரீஸ் டிவைஸ்களையும் நம்மால் ஐரோப்பா எலக்ட்ரானிக்ஸ் சான்றிதழ் EEC தளத்தில் பார்க்க முடிகிறது. இதில் போகோ டேப்லெட் சாதனத்துடன் இணக்கமான ஸ்டைலஸ் (Stylus) மற்றும் டேப்லெட் கீபோர்ட் (Keyboard) உடன் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் சியோமி வரிசையில் அடுத்து அறிமுகமாகவிருக்கும் சில டிவைஸ்களின் தகவல்களும் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 24071KB3FG என்ற மாடல் எண்ணுடன் போகோ டேப்லெட் சாதனத்துடன் இணக்கமான போகோ கீபோர்ட் சாதனம் பட்டியலில் காணப்பட்டு அதன் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், போகோ டேப்லெட் டிவைஸ் உடன் இணக்கமான ஸ்டைலஸ் சாதனம் 2407CMPBC என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டு, அதன் வருகையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு டிவைஸ்களும் டேப்லெட் ஸ்டைலஸ் (POCO Tablet Stylus) மற்றும் டேப்லெட் கீபோர்ட் (POCO Tablet Keyboard) என்ற பெயரில் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர போகோ அறிமுகம் செய்யவிருக்கும் முதல் டேப்லெட் சாதனம் போகோ பேட் (POCO Pad) என்ற பெயருடன் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது சமீபத்தில் ரெட்மி மூலம் வெளியிடப்பட்ட Redmi Pad Pro டேப்லெட்டின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

போகோ பேட் சிறப்பம்சம் (POCO Pad Specifications):
எதிர்பார்க்கப்படும் போகோ பேட் சாதனம் 12.1" இன்ச் IPS LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 2.5K ரெசொலூஷன் (resolution) உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 (Snapdragon 7s Gen 2) பிராசஸர் உடன் 8ஜிபி ரேம் (RAM) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்ஜை (Storage) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த போகோ பேட் சாதனம் 10,000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. இந்த சாதனம் 8MP முன்பக்க செல்பி கேமரா மற்றும் 8MP பின்பக்க ரியர் கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் குவாட் ஸ்பீக்கர் அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரெட்மி பேட் ப்ரோ (Redmi Pad Pro) டேப்லெட் சாதனம் இந்திய சந்தையில் ரூ. 33,000 என்ற விலை புள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications