POCO வெச்ச டபுள் ட்ரீட்.. நவம்பர் 26-க்கு போகோ F8 சீரிஸ் மட்டுமில்ல.. கூடவே, வருது போகோ பேட் X1 மாடல்!
ஒட்டுமொத்த போகோ பிரியர்களும் போகோ எப்8 சீரிஸ் (POCI F8 Series) மாடல்களுக்கு வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இவர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்தது போல போகோ பேட் எக்ஸ்1 (POCO Pad X1) மற்றும் போகோ பேட் எம்1 (POCO Pad M1) மாடல்களும் அதே தேதியில் களமிறங்க இருக்கின்றன. இந்த டேப்லெட் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் வருகிற நவம்பர் 26ஆம் தேதி போகோ எப்8 ப்ரோ மற்றும் போகோ எப்8 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கிறது. இந்த இவெண்ட் இந்தோனேசியா நாட்டின் பாலியில் நடக்க இருக்கிறது. இது ஏற்கனவே, உறுதி செய்யப்பட்டதுதான். ஆனால், அதே தேதியில் போகோ பேட் எக்ஸ்1 மற்றும் போகோ பேட் எம்1 வெளியாக இருப்பதை போகோ நிறுவனம் இப்போது உறுதி செய்துள்ளது.

போகோ பேட் எக்ஸ்1
இதன் முக்கிய பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த போகோ பேட் எக்ஸ்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7+ Gen 3 SoC) கிடைக்க இருக்கிறது. 3.2K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 11.2 இன்ச் டிஸ்பிளே, 13 எம்பி கேமரா, 8850mAh பேட்டரியை எதிர்பார்க்கலாம்.
போகோ பேட் எம்1
இந்த போகோ டேப்லெட்டில் 12.1 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2.5K ரெசொலூஷன் வர இருக்கிறது. அதேபோல பெரிய 12000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே போகோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த டேப்லெட்கள் ரூ.25,000 மற்றும் ரூ.28,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது, போகோ எப்8 சீரிஸ் மாடல்களை பார்க்கலாம்.
போகோ எப்8 ப்ரோ அம்சங்கள் (POCO F8 Pro Specifications): இந்த போகோ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் (2510 x 1156 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போகோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6210mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது.
போகோ எப்8 அல்ட்ரா அம்சங்கள் (POCO F8 Ultra Specifications): 6.9 இன்ச் (2608 x 1200 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் வர இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது.
6500mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பீச்சர்களில் சிப்செட் விவரங்களை மட்டுமே போகோ உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. ஏனென்றால், சீனாவில் வெளியான ரெட்மி கே90 மற்றும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களின் ரீபிராண்ட் வெர்ஷன்களாக இந்த போகோ எப்8 சீரிஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








