மிரண்டு போன மார்க்கெட்.. 12000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்? என்ன விலை?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ பேட் எம்1 (Poco Pad M1) மாடலை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ பேட் எம்1 அம்சங்கள் (Poco Pad M1 Specifications): 12.1-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ பேட் எம்1 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560×1600 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Qualcomm's Snapdragon 7s Gen 4 chipset) சிப்செட் உடன் இந்த போக்கோ பேட் எம்1 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா உடன் போக்கோ பேட் எம்1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 1080பிக்சல்ஸ் வீடியோ பதிவு ஆதரவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போக்கோ டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad speakers) இந்த புதிய போக்கோ பேட் எம்1 மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 300% வால்யூம் பூஸ்ட் (300% volume boost) ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
12000mAh பேட்டரி உடன் போக்கோ பேட் எம்1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 ஃபாஸ்ட் ஆதரவு மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
குறிப்பாக வைஃபை 6, புளூடூத் 5.4, எஸ்.பி.சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ பேட் எம்1 மாடலில் உள்ளன. மேலும் ஃப்ளிக்கர், ஹால், ஆர்ஜிபி எல்இடி, ஐஆர் ரிமோட் மேக்னெட்டிக் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் போக்கோ பேட் எம்1 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் எடை 610 கிராம் ஆகும்.

சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi's HyperOS 2) மூலம் போக்கோ பேட் எம்1 மாடல் இயங்குகிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதி இந்த சாதனத்தில். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. ப்ளூ மற்றும் கிரே நிறத்தில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ பேட் எம்1 மாடலின் விலை USD 349 (இந்திய மதிப்பில் ரூ.31,130)-ஆக உள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய போக்கோ டேப்லெட்.


Click it and Unblock the Notifications








