Home
Gadgets

GOAT சேல்.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. கிடைக்காத ரேட்ல 10000mAh பேட்டரி.. 12.1 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் கோட் விற்பனையில் (Flipkart GOAT Sale) கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட 12.1 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்களுடன் வெளியான போகோ பேட் 5ஜி (POCO Pad 5G) மாடலுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் கொண்ட இந்த போகோ டேப்லெட்டின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போகோ பேட் 5ஜி அம்சங்கள் (POCO Pad 5G Specifications): இந்த டேப்லெட்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்ட 12.1 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

GOAT சேல்.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. கிடைக்காத ரேட்ல 10000mAh பேட்டரி!

மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் அவுட்புட் கிடைக்கும். சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS), ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆகவே, ஓரளவுக்கு லேட்டஸ்ட் யுஐ எதிர்பார்க்கலாம்.

இதுவொரு 5ஜி டேப்லெட் மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த போகோவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 1.5 டிபிக்கான ஸ்டோரேஜை மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) மூலம் பெற்று கொள்ளலாம். 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த போகோ பேட் 5ஜி மாடல் கொடுக்கிறது. ஆடியோவில் மிரளவிட்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கிறது.

GOAT சேல்.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. கிடைக்காத ரேட்ல 10000mAh பேட்டரி!

டூயல் மைக்ரோபோன்களை (Dual Microphones) போன்களை கொடுக்கிறது. ஹைபிரிட் டூயல் சிம் கார்டு மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொடுக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த போகோ பேட் 5ஜி டேப்லெட்டில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும், 7.52 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது. 568 கிராம் எடை உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. இது மார்கெட் விலையாகும். இப்போது, பிளிப்கார்ட் கோட் விற்பனையில் ரூ.3,000 விலை குறைப்பு போக ரூ.20,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. இதுபோக எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO Pad 5G With 8GB RAM Available At Discounted Price in Flipkart GOAT Sale Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X