Home
Gadgets

மொபைல் விலைக்கு 5G Tablet.. 12.1-இன்ச் டிஸ்பிளே, 10000mAh பேட்டரி, Smart Pen.. பரபரப்பை கிளப்பிய POCO!

POCO Pad 5G Price: 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரை.. எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றனவோ, அதெல்லாம் தான் மார்க்கெட் ராஜா. அதே 'ஸ்ட்ரேடஜி' தான் 5ஜி டேப்லெட் சந்தையிலும் எடுபடும். அதை நன்றாக புரிந்துகொண்ட போக்கோ நிறுவனம், போக்கோ பேட் 5ஜி (Poco Pad 5G) டேப்லெட்டை இந்தியாவில் இன்று (ஆக.23) அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட்டின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது விற்பனைக்கு வரும்? என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்ல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் குவாட் ஸ்பீக்கர் செட்டப் உடனான 12.1 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மொபைல் விலைக்கு 5G Tablet.. பரபரப்பை கிளப்பிய POCO!

மேலும் இந்த லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடனும் வருகிறது. இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது ஐபி52 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. கூடவே போக்கோ ஸ்மார்ட் பென் (Poco Smart Pen) மற்றும் போக்கோ கீபோர்டுக்கான (Poco Keyboard) ஆதரவுடன் வருகிறது.

போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 2கே (2,560 x 1,600 பிக்சல்ஸ்), 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவானது TÜV Rheinland ட்ரிபிள் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பையும் பெற்றுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இந்த டேப்லெட் 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்ல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட்டின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1.5TB வரை விரிவாக்கலாம். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது.

கேமராவை பொறுத்தவரை, போக்கோ பேட் 5ஜி டேப்லெட் ஆனது LED ஃபிளாஷ் யூனிட்டுடன் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் டிஸ்பிளேவின் வலது பக்க பெசலில் 8 மெகாபிக்சல் செல்பீ சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங் கட்டமைப்புடன் வருகிறது.

சவுண்ட் சிஸ்டமை பொறுத்தவரை, இது குவாட்-ஸ்பீக்கர் சிஸ்டம், இரண்டு மைக்ரோஃபோன்கள், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் டால்பி விஷன் ஆதரவுடனும் வருகிறது. பேட்டரியை பொறுத்தவரை 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை போக்கோ பேட் 5ஜி டேப்லெட் ஆனது டூயல் 5ஜி, வைஃபை 6, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் 5.2 ஆகியவற்றுடன் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டும் கிடைக்கிறது. கடைசியாக அளவீட்டில் இந்த டேப்லெட் 280.0 x 181.85 x 7.52மிமீ மற்றும் எடையில் 568 கிராம் உள்ளது.

போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டின் விலை, விற்பனை மற்றும் சலுகைகள்: இந்தியாவில் போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் கோபால்ட் ப்ளூ மற்றும் பிஸ்தா கிரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும்.

போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டின் முதல் விற்பனையானது, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கார்டுகளில் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக ரூ.1,000 மாணவர்களுக்கான தள்ளுபடியும் கிடைக்கும். இந்த சலுகைகள் விற்பனையின் முதல் நாள் மட்டுமே கிடைக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO Pad 5G with 10000 mAh battery Launched in India Price Specifications Sale Date Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X