Home
Gadgets

POCO சம்பவம்.. பட்ஜெட்ல பெரிய டிஸ்பிளே.. 10,000mAh பேட்டரி.. தரமான 5G Tablet.. இனி ஸ்மார்ட்போன் தேவையில்லை..

போகோ (POCO) நிறுவனம் அதன் முதல் புதிய டேப்லெட் (Tablet) சாதனத்தை விரைவில் இந்திய டேப்லெட் சந்தையில் (Indian Tablet Market) அறிமுகம் செய்யவுள்ளது. இது பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களை பேக் செய்யும் சாதனமாக வெளிவரவுள்ளது. ஸ்மார்ட்போன் (Smartphone) விலையில் போகோ டேப்லெட் (POCO Tablet) சாதனத்தை வழங்க போகோ முடிவு செய்துள்ளது. இந்த வரவிருக்கும் புதிய டேப்லெட் சாதனத்தின் விலை என்ன? இதன் அம்சம் என்ன? இது என்ன மாடல் என்பது போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

போகோ (POCO) நிறுவனம் அதன் முதல் டேப்லெட் சாதனத்தை உலக டேப்லெட் சந்தையில் (Global Tablet Market) கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த அறிமுகத்திற்கு பிறகு, இந்திய சந்தையில் எப்போது இந்த அட்டகாசமான டேப்லெட் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆர்வத்துடன் காத்திருந்தவர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டது போல, சமீபத்திய லீக் தகவல் ஒரு குட் நியூஸை வெளியிட்டுள்ளது.

POCO சம்பவம்.. பட்ஜெட்ல பெரிய டிஸ்பிளே.. 10,000mAh பேட்டரி.. தரமான Tab

போகோ பேட் 5ஜி டேப்லெட் (POCO Pad 5G Tablet):

போகோ பிராண்ட் அறிமுகம் செய்ய காத்திருக்கும் இந்த புதிய டேப்லெட் சாதனத்தை நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய சாதனம் போகோ பேட் (POCO Pad) என்ற பெயருடன், மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போகோ பேட் டேப்லெட்டின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சாதனம் BIS தளத்தில் காணப்பட்டுள்ளது.

பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (Bureau of Indian Standards) என்று அழைக்கப்படும் பிஐஎஸ் (BIS) தளத்தில் போகோ பேட் 5ஜி (POCO Pad 5G) டேப்லெட் காணப்பட்டுள்ளதாக லீக் தகவல் குறிப்பிடுகிறது. போகோ நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த போகோ பேட் சாதனம் வைஃபை ஒன்லி மாடலாக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 5ஜி சாதனம் பற்றிய எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்தத்த்து.

ஆனால், இப்போது போகோ நிறுவனம் இந்திய சந்தையில் போகோ பேட் 5ஜி (POCO Pad 5G Tablet) டேப்லெட் சாதனத்தை 24074PCD2I என்ற மாடல் எண்ணுடன் வெளியிடவுள்ளது என்பது BIS தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பது இங்கே. அறிமுகம் செய்யப்படவிருக்கும் போகோ பேட் மறுபெயரிடப்பட்ட ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) என்பது குறிப்பிடத்தக்கது.

போகோ பேட் 5ஜி டேப்லெட் விலை மற்றும் சிறப்பம்சம் (POCO Pad 5G Tablet Price and Specifications):

இந்த போகோவின் முதல் டேப்லெட் சாதனம் 12.1" இன்ச் அளவு கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD display) 2560 x 1600 பிக்சல் ரெசொலூஷன் உடன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. போகோ டேப்லெட் சாதனம் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போகோ பேட் டேப்லெட் சாதனம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் 8GB of LPDDR4X ரேம் (RAM) மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் (storage) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் சாதனம் 8MP முன்பக்க மற்றும் பின்புற கேமராவை கொண்டிருக்கும். இது 10,000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும்.

இந்த போகோ டேப்லெட் சாதனம் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வெளிவரும். இந்த டேப்லெட் சாதனம் இந்திய சந்தையில் ரூ. 25,000 முதல் ரூ. 27,000 விலை புள்ளியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் விலையில் இப்போது பெரிய டிஸ்பிளேவுடன் டேப்லெட் சாதனமே வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Poco Pad 5G Spotted On BIS Certification Site Check Price and Specification Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X