மலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு!
இந்த மாதத்தின் சூப்பர் கூல் ஸ்மார்ட் கேட்ஜெட் பட்டியலில், சிறந்த ஸ்மார்ட் கேட்ஜெட்டாக இந்த புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு(Saco Foldable Bluetooth Keyboard) இடம்பிடித்துள்ளது.

ஸ்மார்ட்போன், டேப்லெட், கம்ப்யூட்டர், மேக் சிஸ்டம் போன்ற எந்த சாதத்துடனும் வேண்டுமானாலும் நீங்கள் இதை இணைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் மற்றும் விலையைக் கேட்டால் உடனே ஆர்டர் செய்துவிடுவீர்கள்.

மல்டி டச் பேட் மற்றும் ட்ராக் பேட்
பாக்கெட் சைசில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வயர்லெஸ் ப்ளூடூத் கீபோர்டு, உங்கள் பணியை விரைவாகவும் எளிதாகவும் முடிக்க உதவும். சயின்ஸ் டெக் திரைபடங்களில் வரும் கேட்ஜெட் போல் அட்டகாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மல்டி டச் பேட் மற்றும் ட்ராக் பேட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

40 மணிநேரம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தலாமா?
ஸ்மார்ட் டச் வசதியுடன் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் இதை நீங்கள் 2 மணிநேரம் சார்ஜ் செய்து, தடை இல்லாமல் 40 மணிநேரம் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை வயர் மற்றும் வயர்லெஸ் கீபோர்டாகவும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேக்னெட்டிக் ஃபோர்ஸ் கிளோஸ்
மேக்னெட்டிக் ஃபோர்ஸ் கிளோஸ் பயன்பாடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டு இல் கொடுக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த காந்தங்கள் கீபோர்டை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது, இதனால் உங்கள் பையில் இருக்கும் பொழுது பாதுகாப்பாக மூடிய படியே இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இருந்தால் போதும்
இந்த வயர்லெஸ் ப்ளூடூத் கீபோர்டை விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் iOS என அனைத்து தளங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக ப்ளூடூத் சேவை மட்டும் இருந்தால் போதுமானது.

மலிவு விலையில் ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு
தற்பொழுது இந்த சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு வெறும் ரூ.1,800 என்ற சலுகை விலையுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications