யாரு சொன்னா.. ரூ.20,000 போட்டா தான் நல்ல TV வாங்க முடியும்னு? ரூ.10,000 போதும்! இதோ சாட்சி!

|

தற்போது இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளன. அதேபோல் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றுதான் கூறவேண்டும்.

 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

அதேபோல் அடுத்த ஆண்டு கம்மி விலையில் பல அதிநீன ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்படலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.10,000-க்குள் வாங்கக் கிடைக்கும் அருமையான 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

32-இன்ச் Vu Premium Series ஸ்மார்ட் டிவி (32UA)

32-இன்ச் Vu Premium Series ஸ்மார்ட் டிவி (32UA)

அமேசான் தளத்தில் 32-இன்ச் Vu Premium Series ஸ்மார்ட் டிவி (32UA) மாடலின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த Vu ஸ்மார்ட் டிவி 1366x768 பிக்சல்ஸ்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

32-இன்ச் Vu Premium Series ஸ்மார்ட் டிவி (32UA) மாடலில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பல செயலிகளை பயன்படுத்த முடியும். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், பவர்ஃபுல் பிராசஸர் மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!

32-இன்ச் இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட் Linux டிவி

32-இன்ச் இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட் Linux டிவி

பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட் Linux டிவி மாடலை ரூ.8,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஸ்மார்ட் குவாட்-கோர்ட் பிராசஸர், Linux இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற செயலிகளை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி ஆடியோ, 4ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி (32F52)

32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி (32F52)

அமேசான் தளத்தில் 32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி (32F52) மாடலின் விலை ரூ.10,899-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், எச்டிஆர் ஆதரவு, 16 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், க்ரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட், கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியில் பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

32-இன்ச் Coocaa ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு  டிவி (32S7G)

32-இன்ச் Coocaa ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32S7G)

அமேசான் தளத்தில் 32-இன்ச் Coocaa ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32S7G) மாடலின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

Dot One ஸ்மார்ட் டிவி  (32S.1-FLC9 (Black) (2022 Model)

Dot One ஸ்மார்ட் டிவி (32S.1-FLC9 (Black) (2022 Model)

Dot One ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பல செயலிகளை பயன்படுத்த முடியும். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி

Dot One ஸ்மார்ட் டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.8,468-விலையில் வாங்க முடியும். அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

 32-இன்ச் Sansui  ஸ்மார்ட் டிவி (JSY32SKHD)

32-இன்ச் Sansui ஸ்மார்ட் டிவி (JSY32SKHD)

அமேசான் தளத்தில்32-இன்ச் Sansui ஸ்மார்ட் டிவி (JSY32SKHD) மாடலின் விலை ரூ.10,490-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி
கார்டுகளை பயன்படுத்தி இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவி ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்,1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

Kodak ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ( 32HDX7XPROB)

Kodak ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ( 32HDX7XPROB)

அமேசான் தளத்தில் Kodak ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ( 32HDX7XPROB) மாடலின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், க்ரோம்காஸ்ட் ஆதரவு, வைஃபை ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
Planning to buy Budget Price Smart TV in India 2022 check out these TVs under Rs 10000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X