நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?

|

போட் நிறுவனம் தொடர்ந்து தரமான சாதங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. அதுவும் இப்போது ஸ்மார்ட்வாட்ச், இயர்போன் உள்ளிட்ட சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம்.

போட் ஏர்டோப்ஸ் 100

போட் ஏர்டோப்ஸ் 100

அதன்படி தற்போது கூட பட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 100 எனும் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது boAt நிறுவனம். குறிப்பாக இந்த இயர்பட்ஸ் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. முதலில் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

நான் உயிருடன் இருக்க காரணமே Apple Watch தான்! பள்ளத்தாக்கில் விழுந்த இந்தியரின் வாக்குமூலம்..நான் உயிருடன் இருக்க காரணமே Apple Watch தான்! பள்ளத்தாக்கில் விழுந்த இந்தியரின் வாக்குமூலம்..

தரமான சவுண்ட்

அதாவது இந்த போட் ஏர்டோப்ஸ் 100 மாடல் ஆனது தனித்துவமான வடிவமைப்புடன் ENx, BEAST, IWP, மற்றும் ASAP போன்ற அதிநவீ தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. பின்பு தரமான சவுண்ட், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற ஆதரவுகளையும் வழங்குகிறது இந்த இயர்பட்ஸ்.

சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

ப்ளூடூத் 5.2

ப்ளூடூத் 5.2

புதிய போட் ஏர்டோப்ஸ் 100 ஆனது ப்ளூடூத் 5.2, IWP எனப்படும் (Insta Wake N Pair) அம்சம் கொண்டுள்ளது. குறிப்பாக இது கேஸ்-ஐ திறந்ததும் பயனர் ஸ்மார்ட்போன் உடன் இணைந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இந்த சீனாக்காரங்களே இப்படி தான்! வெறும் 7 போன்களில் மட்டுமே Jio 5G சப்போர்ட்-ஐ அறிவித்த சீன நிறுவனம்!இந்த சீனாக்காரங்களே இப்படி தான்! வெறும் 7 போன்களில் மட்டுமே Jio 5G சப்போர்ட்-ஐ அறிவித்த சீன நிறுவனம்!

 50 மணி நேரத்திற்கான பேக்கப்

50 மணி நேரத்திற்கான பேக்கப்

அதேபோல் இந்த சாதனத்தில் உள்ள பீஸ்ட் (BEAST) மோட் ப்ளூடூத் மூலம் அல்ட்ரா லோ-லேடென்சி ரியல் ஆடியோவை 50ms வேகத்தில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போட் ஏர்டோப்ஸ் 100 மாடலில் உள்ள கல்வேனிக் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

ரூ.13,999-விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை இறக்கிவிட்ட பிரபல நிறுவனம்.! இன்னைக்கே வாங்கிருங்க!ரூ.13,999-விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை இறக்கிவிட்ட பிரபல நிறுவனம்.! இன்னைக்கே வாங்கிருங்க!

ASAP சார்ஜ் தொழில்நுட்பம்

ASAP சார்ஜ் தொழில்நுட்பம்

மேலும் இதற்கு வழங்கப்பட்ட ASAP சார்ஜ் தொழில்நுட்பம் ஆனது இயர்பட்ஸ்-ஐ அதிவேகமாக சார்ஜ் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த இயர்பட்ஸ்-ஐ சுமார் ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் கூட 1 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறுகிறது.

தெளிவான ஆடியோவைப் பெற முடியும்

தெளிவான ஆடியோவைப் பெற முடியும்

குறிப்பாக இந்த போட் ஏர்டோப்ஸ் 100 மாடலில் 10எம்எம் டைனமிக் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன. இவை சிறந்த ஆடியோ மற்றும் டீப் பேஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள குவாட் மைக்ரோபோன்கள் மற்றும் ENX தொழில்நுட்பம் அழைப்பின் போதும் தெளிவான ஆடியோவைப் பெற முடியும்.

இவ்ளோ அவசரமா? Jio மற்றும் Airtel பயனர்கள் கவனத்திற்கு.. எப்போனாலும் இது நடக்கும் ரெடியா இருங்க!இவ்ளோ அவசரமா? Jio மற்றும் Airtel பயனர்கள் கவனத்திற்கு.. எப்போனாலும் இது நடக்கும் ரெடியா இருங்க!

டச் கண்ட்ரோல் வசதி

டச் கண்ட்ரோல் வசதி

அதேபோல் இந்த சாதனத்தில் டச் கண்ட்ரோல் வசதி இருப்பதால், பாடல்கள், வால்யும் மாற்றுவது மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட், சிரி வசதிகளைக் கொண்டுள்ளது இந்த இயர்பட்ஸ். மேலும் வானிலை, செய்திகள், கிரிக்கெட் ஸ்கோர் போன்றவற்றை ஒன் டச் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அப்பவே சொன்னோம் கேட்டீங்களா? ரொம்ப மலிவு விலை.. மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் Samsung போன்!அப்பவே சொன்னோம் கேட்டீங்களா? ரொம்ப மலிவு விலை.. மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் Samsung போன்!

போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை

போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை

புதிய போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ.1299-ஆக உள்ளது. இதை பிளிப்கார்ட் மற்றும் போட் வலைத்தளத்தில் வாங்க முடியும். சபையர் புளூ, ஒபல் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Planning to buy Best Earbuds under Rs 1300 in India Check All New boAt Airdopes 100 TWS: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X