Home
Gadgets

PhonePe அறிமுகம் செய்த புதிய சாதனம்.. 4ஜி ஆதரவு, 7 நாள் பேட்டரி.. டேப் அண்ட் பே.. எந்த மாடல்?

கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது போன்பே (PhonePe). குறிப்பாக இந்த போன்பே செயலியில் பயனுள்ள பல அம்சங்கள் உள்ளன. இந்நிலையில் போன்பே நிறுவனம் நெக்ஸ்ட் ஜெனரேஷன் (next-generation) ஸ்மார்ட் ஸ்பீக்ககரை அறிமுகம் செய்துள்ளது.

வணிகர்களின் தேவைகளுக்காக குரல் அடிப்படையிலான கட்டண அறிவிப்புகளை வழங்குவதற்கு 2022-ம் ஆண்டு போன்பே ஸ்மார்ட்ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது. குறிப்பாக இதை 21 மொழிகளில் பயன்படுத்த முடிந்தது. பின்பு இதில் முன்னணி இந்திய பிரபலங்களின் குரல் அம்சமும் அடங்கும். மேலும் QR மூலம் ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்தால் சில நொடியில் அறிவிப்பை வழங்கிவிடும் வகையில் இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டது.

PhonePe அறிமுகம் செய்த புதிய சாதனம்.. 4ஜி ஆதரவு.. எந்த மாடல்?

இந்நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்ஸ்பீக்கர் 2வது ஜென் (SmartSpeaker 2nd Gen) மாடல் ஆனது முந்தைய ஸ்பீக்கரின் அனைத்து அம்சங்களையும் தக்க வைத்துக் கொண்டு பல புதிய மேம்பாடுகளுடன் வெளிவந்துள்ளது. அதாவது இப்போது வெளிவந்துள்ள ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆனது வேகமான, நம்பகமான இணைப்பிற்காக இது 4G நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது.

குறிப்பாக இந்த புதிய போன்பே ஸ்மார்ட் ஸ்பிக்கர் மாடலை 75 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு ஏழு நாட்களுக்கு மேல் அல்லது 160+ மணிநேரம் பேட்டரி பேக்கப் வழங்குகிறது இந்த புதிய போன்பே சாதனம். அதுவும் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குவதால் இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.

போன்பே ஸ்மார்ட்ஸ்பீக்கர் 2வது ஜென் (PhonePe SmartSpeaker 2nd Gen) முக்கிய அம்சங்கள்:
ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast charging support)
விஷூவல் பேமெண்ட் கன்ஃபர்மேஷன்(Visual payment confirmation)
யுஎஸ்பி-சி கனெக்டர் (Type-C connector)
பில்ட்-இன் ஸ்லாட் ஃபார் க்யூஆர் ஸ்டாண்ட் (Built-in slot for QR stand)
டேப் அண்ட் பேfunctionality

அதேபோல் இந்த போன்பே ஸ்மார்ட்ஸ்பீக்கர் 2வது ஜென் மாடல் தெளிவான ஆடியோவை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போன்பே நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்பீக்கரை வாங்க வணிகர்கள் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) அல்லது இண்டஸ் ஆப் ஸ்டோரிலிருந்து (Indus App Store) போன்பே பிசினஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

PhonePe அறிமுகம் செய்த புதிய சாதனம்.. 4ஜி ஆதரவு.. எந்த மாடல்?

மேலும் போன்பே நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களை இந்த போன்பே செயலியில் சேர்ந்து வருகிறது. அதுவும் கூகுள் பே, பேடிஎம் செயலிகளை விட பல மேம்பட்ட அம்சங்கள் இந்த போன்பே செயலி மூலம் பயன்படுத்த முடிகிறது. எனவே தான் இந்தியாவில் அதிகளவு பயனர்கள் இந்த போன்பே செயலியைப் பயன்படுத்துகின்றனர். மேலும் போன்பே செயலியில் விரைவில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PhonePe SmartSpeaker 2nd Gen launched in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X