Home
Gadgets

பார்ட்டி செய்ய ரெடியா? கம்மி விலையில் Philips அறிமுகம் செய்த Speaker.. என்ன மாடல்? என்ன விலை?

அந்தா இந்தா என்று வரஇறுதியை வெற்றிகரமாக நெருங்கிவிட்டோம். அதான்ங்க வீகென்ட் வந்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சின்ராசை கையில் பிடிக்க முடியாது என்பது போல பலரும் இந்த இரண்டு நாட்களை படு குஷியாக கழிக்க திட்டங்களை தீட்டி வருவீர்கள். இன்னும் சிலர் திட்டங்களே இல்லாமல் ஓய்வு எடுத்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பார்கள். நீங்கள் யாராக இருந்தாலும், பிலிப்ஸ் (Philips) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 30W பார்ட்டி ஸ்பீக்கரை (Party Speaker) நீங்கள் பார்ட்டி செய்யும் நேரம் வந்துவிட்டது என்பதை தெரிவித்துள்கொள்கிறோம்.

பிலிப்ஸ் ஆடியோ தயாரிப்பு நிறுவனம் (Philips Audio) இந்தியாவில் இப்போது புதிதாக பிலிப்ஸ் TAX2208 (Philips TAX2208) என்ற புதிய ப்ளூடூத் பார்ட்டி ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பீக்கரில் 30W ஆடியோ அவுட்புட் (Audio output), டைனமிக் பாஸ் பூஸ்ட் (Dynamic Bass Boost), புளூடூத் v5.2 (Bluetooth v5.2) இணைப்பு மற்றும் பார்ட்டி லைட் முறைகள் (Party light mode) போன்ற அம்சங்கள் வருகின்றன.

பார்ட்டி செய்ய ரெடியா? கம்மி விலையில் Philips அறிமுகம் செய்த Speaker..

பிலிப்ஸ் TAX2208 புளூடூத் பார்ட்டி ஸ்பீக்கர் (Philips TAX2208 bluetooth Party Speaker):

இந்த புதிய பார்ட்டி ஸ்பீக்கர் சிறிய வடிவமைப்புடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிலிப்ஸ் TAX2208 புளூடூத் பார்ட்டி ஸ்பீக்கர் (Philips TAX2208 bluetooth Party Speaker) சாதனம் பற்றிய சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். Philips TAX2208 ஆனது பாஸ் மற்றும் லைட்டிங் விளைவுகளை மேம்படுத்த டைனமிக் பாஸ் பூஸ்ட் மற்றும் பார்ட்டி லைட் முறைகளை வழங்குகிறது. பிலிப்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது பார்ட்டி லைட்டிங் அனுபவத்தை வழங்க சிங்க்டு LED லைட்களுடன் வருகிறது.

இந்த ஸ்பீக்கரின் 30W ஆடியோ அவுட்புட் (30W audio output) வீடுகளில் பார்ட்டி செய்ய ஏற்றது. அதேபோல் இது சிறிய வடிவில் இருப்பதனால், எடுத்து செல்வது மிகவும் சுலபமானது. கூடுதலாக, இந்த புளூடூத் பார்ட்டி ஸ்பீக்கரில் ட்ரூ வயர்லெஸ் தொழில்நுட்பம் (True Wireless technology) உள்ளது. பயனர்கள் இதை மற்றொரு ஸ்பீக்கர் உடன் இணைத்து, ஸ்டீரியோ ஸ்பீக்கர் (stereo speaker) கருவியாகவும் பயன்படுத்தலாம்.

இது உள்ளமைக்கப்பட்ட கரோக்கி கண்ட்ரோல் (inbuilt karaoke controls) மற்றும் மைக்ரோஃபோனுடன் (Microphone) வருகிறது. இது பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Philips TAX2208 ஆனது 3,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 7 மணிநேரம் வரை பிளே நேரத்தை வழங்குகிறது. இது புளூடூத் v6.2 இணைப்பு மற்றும் SBC ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. இதன் விலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?

பிலிப்ஸ் TAX2208 புளூடூத் பார்ட்டி ஸ்பீக்கர் விலை (Philips TAX2208 bluetooth Party Speaker Price):

பிலிப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த Philips TAX2208 விலை இந்தியாவில் ரூ. 5,490-க்கு வாங்க கிடைக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் Amazon இல் இது தற்போது ரூ.18,358 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இதன் மீது புதிய சலுகை ஏதேனும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், 30W ஆடியோ அவுட்புட் உடன் இன்னும் இந்தியாவில் பல்வேறு ஸ்பீக்கர்கள் வாங்க கிடைக்கின்றன.

அதை பற்றிய விபரங்கள் இதோ. Portronics Radiant ஸ்பீக்கர் ரூ.2,849 விலையிலும் மற்றும் Blaupunkt Atomik PS30 Pro அமேசானில் ரூ.2,789 விலையிலும் வாங்க கிடைக்கிறது. BoAt Partypal 53 விலை ரூ.4999, JBL Flip 6 ரூ.9,999க்கு Flipkart இல் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Philips TAX2208 Bluetooth party speaker with LED synchronised light launched in India check price and specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X