ஓல்ட் இஸ் கோல்டு.. தீயாய் விற்பனையாகும் புது Philips ஸ்பீக்கர்கள்.. கம்மி விலையில் அலறுது சவுண்ட்.. என்ன விலை?
பிலிப்ஸ் (Philips) நிறுவனம் துவங்கப்பட்டு ஏறக்குறைய 133 ஆண்டுகள் ஆகிவிட்டது. தொடர்ந்து இந்த நிறுவனம் பல எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புக சாதனங்களை உலகம் முழுக்க விற்பனை செய்து வருகிறது. தொழில்நுட்ப உலகில் பல தசாப்தங்கள் கடந்த பிலிப்ஸ் நிறுவனம், கிளாசிக் டச் டிஸைனுடன் உடன் கண்டெம்ப்ரரி அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்பீக்கர் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. சுலபமாக சொன்னால், பழைய லுக்கில் புதிய ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளது. இவை முறையே பிலிப்ஸ் TAS2218 மற்றும் பிலிப்ஸ் TAS2228 ப்ளூடூத் ஸ்பீக்கர் என்ற பெயருடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பிலிப்ஸ் நிறுவனம் இப்போது பிலிப்ஸ் TAS2218 (Philips TAS2218) மற்றும் பிலிப்ஸ் TAS2228 (Philips TAS2228) ப்ளூடூத் ஸ்பீக்கர் என்ற இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. பழைய காலத்து பாட்டு பெட்டி போன்ற வடிவமைப்பில் இந்த புதிய ஸ்பீக்கர் சாதனங்களை பிலிப்ஸ் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. என்ன தான் சந்தையில் பல ஸ்மார்ட் தோற்றங்களில் ஸ்பீக்கர்கள் விற்பனை செய்யப்பட்டாலும், கிளாஸ் லுக் தனி கவனத்தை ஈர்க்கிறது.

பிலிப்ஸ் TAS2218 (Philips TAS2218) மற்றும் பிலிப்ஸ் TAS2228 (Philips TAS2228) ப்ளூடூத் ஸ்பீக்கர்:
சும்மாவா சொன்னார்கள் ஓல்ட் ஐஸ் கோல்டு என்று, இந்த வார்த்தைக்கு அழகு சேர்க்கும் விதமாக பிலிப்ஸ் TAS2218 (Philips TAS2218) மற்றும் பிலிப்ஸ் TAS2228 (Philips TAS2228) ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் தற்போது விற்பனைக்கு வாங்கவும் கிடைக்கின்றன. இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது முழுமையாக பார்க்கலாம்.
பிலிப்ஸ் TAS2218 சாதனம் 2.0 சேனல் செட்டப் உடன் 10W சவுண்ட் அவுட்புட் அம்சத்தை கொண்டுள்ளது. இது தரமான மற்றும் கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் குவாலிட்டியை கொண்டுள்ளது. இதில் 5W டூயல் ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டுள்ளதனால், இதன் ஆடியோ தரம் தாறுமாறாக இருக்கிறது. மறுகையில், பிலிப்ஸ் TAS2228 சாதனம் 20W அவுட்புட் ஆடியோ அம்சத்தை வழங்கி, உங்கள் அறையை அலறவிடுகிறது.
இதில் பிலிப்ஸ் நிறுவனம் 10W டூயல் ஸ்பீக்கர்களை வழங்கியுள்ளது. இதன் தரம் பற்றி நாம் குறிப்பிட்டு கூறவேண்டியதில்லை, ஒரு ஆடியோ சாதனத்திற்கு தேவையான அணைத்து விஷயங்களையும் இந்த பிலிப்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் (Philips Bluetooth Speakers) தன்வசம் அடக்கியுள்ளன. இந்த இரண்டு ஸ்பீக்கர் சாதனங்களும் மரக்கட்டையால் செய்யப்பட்ட ஆன்ட்டிக் டிசைன் உடன் வின்டேஜ் லுக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உங்கள் அறைக்கு ஒரு தனி அழகை சேர்க்கிறது.
பிலிப்ஸ் TAS2218 மற்றும் பிலிப்ஸ் TAS2228 ஸ்பீக்கர் விலை (Philips TAS2218 and Philips TAS2228 Speaker Price):
பிலிப்ஸ் TAS2218 மற்றும் பிலிப்ஸ் TAS2228 ஆகிய இரண்டு சாதனங்களும் ப்ளூடூத் 5.0 வயர்லெஸ் ஸ்ட்ரீமிங் (Bluetooth 5.0 Wireless Streaming) ஆதரவை கொண்டுள்ளது. இதில் USB பிளேபேக் (Playback), எஃப்எம் ரேடியோ (FM Radio), மைக் இன்புட் (MIC Input), ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ டெக்னாலஜி (True Wireless Stereo Technology), போன்ற பல அம்சங்களை பிலிப்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த ஸ்பீக்கர் சாதனங்கள் 70% சவுண்ட் திறனுடன் 6 மணி நேரம் தொடர்ச்சியாக பிளே செய்யக்கூடிய பிளேபேக் நேரத்தை வழங்குகின்றன. இதன் விலை பற்றி பேசுகையில், Philips TAS2218 சாதனம் ரூ. 4,490 என்ற விலையிலும், Philips TAS2228 சாதனம் ரூ. 5,490 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. பிலிப்ஸ் ஆன்லைன் தவிர பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.
சிறப்பு சலுகை விலையாக இப்போது Philips TAS2218 ஸ்பீக்கர் ரூ. 2299 விலையில் அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








