ஏரியாவே அரளுது.. பட்ஜெட்ல 160W சவுண்ட்பார்.. உங்க வீட்டையே தியேட்டராக மாற்றும் சரவுண்ட் சவுண்ட்.. என்ன விலை?
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஹோம் ஹியேட்டர் சிஸ்டம் (Home theatre system) அல்லது சவுண்ட் பார் (Soundbar) வாங்க ஐடியா செய்துகொண்டிருக்கிறீர்களா? ஆனால், எந்த மாடலை தேர்வு செய்வதையென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.
பட்ஜெட் விலையில் (Budget price) ஒரு பெஸ்டான ஆடியோ சிஸ்டத்தை (Audio system) தேடி அலையும் வடிக்கையாளர்களுக்காக பிலிப்ஸ் (Philips) நிறுவனம் இப்போது ஒரு புதிய சவுண்ட்பார் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனத்தை பிலிப்ஸ் நிறுவனம் பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் (Philips TAB4228 Soundbar) என்ற பெயருடன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் (Philips TAB4228 Soundbar):
இந்த புதிய பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் (Philips TAB4228 Soundbar) சாதனத்தின் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன? இதை எங்கிருந்து வாங்கலாம்? என்பது போன்ற முழு தகவலை இப்போது பார்க்கலாம். இந்த புதிய பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் (Philips TAB4228 Soundbar) சாதனம் இந்திய சந்தையில் 160W மேக்சிமம் சவுண்ட் அவுட்புட்டை வழங்கும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் சாதனம் ஒரு 2.1 சேனல் காண்பிகிரேஷனில் இயங்கும் சவுண்ட் பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்டிவி, டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து செயல்படுத்தலாம். இது உண்மையில் மிகவும் தரமான மற்றும் கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் தரத்தை வழங்குகிறது என்று பிலிப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் சாதனத்தை பிலிப்ஸ் நிறுவனம் மிகவும் ஸ்லிம் ஆகவும், ஸ்லீக் ஆகவும் மற்றும் எலெகென்ட் டிஸைனுடன் சிறப்பாக வடிவமைத்துள்ளது. இந்த பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் சாதனத்தில் நிறுவனம் இன்பில்ட்டாக ஒரு வயர்டு சப்வூஃப்பர் அம்சத்தை வழங்குகிறது. இந்த சவுண்ட் பார் டிவைஸ் மூன்று EQ மோட் ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் இணைப்பு அம்சங்கள் (Philips TAB4228 Soundbar Connectivity):
ஒவ்வொரு பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த சவுண்ட் பார் EQ லெவல்லை பயனர்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் அம்சத்தையும் ஆதரிக்கிறது என்பதனால், உங்கள் ஸ்மார்ட்போனில் ஈசியாக கனெக்ட் செய்து, பாடல்களை பிளே செய்து மகிழலலாம். இந்த பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் சாதனத்தில் யுஎஸ்பி (USB), எச்டிஎம்ஐ (HDMI ARC), ஆப்டிகல் (Optical), ஆக்ஸ்-இன் (Aux in), மற்றும் கோஆக்சியல் (Coaxial) இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது.
பிலிப்ஸ் TAB4228 சவுண்ட்பார் விலை (Philips TAB4228 Soundbar Price):
இந்த புதிய Philips TAB4228 Soundbar சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்திய ஆடியோ சந்தையில் ரூ. 9,990 என்ற மிகவும் குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சவுண்ட் பார் சாதனம் தற்போது அமேசான் இந்தியா (Amazon India) போன்ற முக்கிய ஆன்லைன் தளங்கள் மற்றும் பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications